சிக்கன் காளான் கிரேவி

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சிக்கன் - 1/4 கிலோ
காளான் - 100கிராம்
வெங்காயம் - 1
தக்காளி- 1
குடைமிளகாய் - 1
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1ஸ்பூன்
முட்டை - 1
சோயாசாஸ் - 1ஸ்பூன்
வேக வைத்த உருளைகிழங்கு- 2
பாவ் பிரட் - 8
உப்பு, எண்ணெய் - தேவைக்கு


 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய காளான், சிக்கன், கு.மிளகாய் மிளகுத்தூள் உப்பு சேர்த்த் வதக்கவும், நன்றாக திக்காக வந்தவுடன் சோயாசாஸ் ஊற்றி வேக வைத்த உ.கிழங்கை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
தோசை கல்லை காயவைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பாவ் பிரெட்டை லேசாக வதக்கி எடுக்கவும்.
சிக்கன் கிரெவியுடன் பாவ் பிரெட்டை தொட்டு சாப்பிடவும்.
விருப்பபட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்