நாண்

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 400 கிராம்,
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி,
ஈஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி,
தயிர் - 1/2 கப்,
பால் - 1/2 கப்,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு


 

மைதா மாவுடன் உப்பு, ஆப்ப சோடா சேர்த்து சலிக்கவும்.
வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு தயிரையும் அதில் விட்டு கலக்கவும்.
ஈஸ்ட் கலவை நுரைத்து வந்தவுடன், சலித்த மாவில் சேர்க்கவும்.
உருக்கிய நெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
கலவையை ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.
2 மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக தேய்த்து, ஒரு பக்கம் சிறிது தண்ணீர் தடவவும்.
சூடான தோசைக்கல்லில் தண்ணீர் தடவிய பாகத்தை போடவும்.
1 நிமிடம் சுட்டவுடன், கல்லை அடுப்பில் இருந்து எடுத்து தலைகீழாக திருப்பி, தணலில் காட்டவும்.
நாண் உப்பி வந்தவுடன் கல்லிலிருந்து எடுக்கவும்.
மேலே லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.


கைப்பிடியுள்ள கனமில்லாத தோசைக்கல்லாக இருந்தால் சுலபமாக இருக்கும்.
கல்லின் அளவிற்கு தகுந்தாற் போல் நாணின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா, இந்த குறிப்பின்படி சரியான அளவில் நாண் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஆனால் தோசைக்கல்லில் வைத்து செய்ய தெரியவில்லை. கல்லை தணலில் காட்டும்போது நாண் விழுந்து விடுகிறது. அதனால் நாணை அவனில் சுட்டு எடுத்தேன். நன்றாக உப்பி வந்தது. நன்றி உங்களுக்கு.