மொச்சை பயிர்

வணக்கம்.மொச்சை பயிர் எப்படி இருக்கும்?.இப்பயிரின் ஆங்கில பெயர் ப்ரோகனா(Broken)அல்லது லிமவா(Lima)?ப்லக் ஐ பயிரும்(Black eye beans) மொச்சை பயிரும் ஒன்றா?தயவு செய்து விளங்கப்படுத்தவும்.நன்றி.

ஹலோ ஷிவ்ய ஸ்ரீ எப்படி இருக்கின்றீர்கள்? மொச்சைச் பயிறைப் பற்றிய குறிப்பு அறுசுவையின் பழைய்ய தளத்தில் படத்துடன் உள்ளது. தயவுச் செய்து அதைப் பார்வையிடவும்.
நீங்கள் இருக்கும் பகுதியில் இந்தியன் அங்காடி இருந்தால், அங்கு மட்டும் தான் இது கிடைக்கும் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் உடைக்கப் பட்ட தட்டை பயிராக தான் கிடைக்கின்றது.ஆகவே நன்கு பார்த்து வாங்கவும்.
lima beans ஸும், black eye beans ஸும் ஓன்றல்ல. lima beans பச்சையாகவும், மேலும் காய்ந்த நிலையில் பல்வேறு நிறங்களிலும் கிடைக்கின்றது.பச்சைய்யாக பயன் படுத்தும் வகையை நம்மூரில் பட்டர் பீன்ஸ் என்று கூறுவார்கள். அவரைக்காயைப் போன்று சற்று பெரியதாக இருக்கும்.அதை உரித்து உள்ளிருக்கும் விதைகளை தான் பயன்படுத்துவார்கள்.பெங்களூர், ஊட்டி போன்ற குளிர் சார்ந்த பகுதிகளிலும்,Hill stations களிலும் தான் அதிகம் விளைவிக்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன்.வெளி நாடுகளில் பெரும்பாலும் frozen செய்யப்பட்டோ அல்லது பதப்பட்ட முறையில் அடைக்கப்பட்ட பாட்டில்களில் தான் அவை கிடைக்கின்றது.அதுவும் உரிக்கப் பட்ட நிலையில் தான் கிடைக்கின்றது. ஆகவே அது தான் இந்த lima beeans என்று பயன் படுத்தியும் வருகின்றேன்.
black eye beans நம்மூர் காராமனியை போன்ற சுவையுடையதாக இருக்கும். ஊறவைத்து சாதாரணமாக வேகவைத்தாலே போதும். குக்கரில் தேவையில்லை. அதைக் கொண்டு புளிக்குழம்பு, காரக்குழம்பு என்று எதில்வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி.

என்னது கேள்விக்கு விளக்கமாக பதில் எழுதியதற்கு மிக்க நன்றி.இப்போழுது என்னக்கு விளங்குகிறது.அம்மா பக்கத்தில் இல்லாத குறையை நீங்களே தீர்த்து வைக்கிறீர்கள்.மிகவும் நன்றி.

நலமா. நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் chinese market இருந்தால் அங்கே பருப்பு sectionனில் காய்ந்த மொச்சை இருக்கும்.அங்கே BROAD BEANS என்று குறிப்பிட்டிருக்கும்.அவை நம்ம ஊரு மொச்சையேதான்.

நான் நலமாக இருக்கின்றேன்.நீங்கள் நலமா?நான் லண்டனில் வசிக்கின்றேன்.கையில் வென்னை இருக்க நெய்யை தேடி அலைகின்றேன் காரணம் எங்க வீட்ல ப்ரொட் பின்ஸ் இருக்கு.உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி அக்கா.

மேலும் சில பதிவுகள்