பால் காறி

தேதி: March 26, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 1/2 லிட்டர்,
உருளைக்கிழங்கு - 4,
எழுமிச்சம் பழம் - 1,
பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
காய்ந்த மிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

பால் கொதிக்கும் போது, எழுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்.
பால் முழுதும் திரிந்த பிறகு, வடித்து திரிந்த கட்டியை பிழிந்து எடுக்கவும்.
அதை சிறு சிறு வடைகளாக தட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இஞ்சி, சீரகம், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் போது, தட்டிய வடைகளை மெதுவாக போடவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கெட்டியாக வந்த பின் இறக்கவும்.


சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களது அனைத்து குறிப்புகளும் அருமை.வித்தியாசமான அதே சமயம் அனைவரும் செய்து பார்ப்பதற்கு ஏற்றவாறு எளிதாக இருக்கிறது.தங்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்.தங்களது உடல் நலம் நல்லபடியாக குணமடைய கடவுளை வேண்டுகிறேன்.

நான் நலமாகிக் கொண்டேயிருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி. எல்லாக் குறிப்புகளுமே தினப்படி வாழ்க்கையில் நான் செய்வது தான் (வீட்டிலிருப்பவர்கள் பாவமா? அல்லது கொடுத்து வைத்தவர்களா? எனக்கு தெரியாது:)) எனவே குறிப்புகள் எளிமையாக இருப்பதில் வியப்பொன்றுமில்லையென நினைக்கிறேன். உங்களின் மேக்கப் பற்றிய குறிப்பும் மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. உங்களின் அனுபவமும், அர்ப்பணிப்பும் தெளிவாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள். உங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

குறிப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கின்றது. குறிப்பும்தான்.

முதலில் குறிப்பின் பெயரைப் படித்தவுடன் பால் கறி என்பதையோ அல்லது பால்காரி(?) என்பதையோ தவறாக டைப் செய்துவிட்டீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆங்கிலத்திலும் தெளிவாக "paal kaari" என்று கொடுத்திருந்ததால் குறிப்பின் உண்மையான பெயரே அதுதான் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.

அதுசரி, காறி என்பதற்கு என்ன பொருள்? தொண்டையைக் காறும் என்பார்கள்.. காறித் துப்புதல் என்பார்கள்.. நீங்கள் சொல்லும் காறிக்கு என்ன பொருள்? தெரிந்தால் குறிப்பிடவும்.

பால் திரிந்து விட்டால், காறி விட்டது என்று எங்கள் அம்மா சொல்வார்கள், அதனால் தான் இந்த பெயர் வந்திருக்கும் என நினைக்கிறேன். அது காரணப் பெயரா? இடுகுறிப்பெயரா? என்பதை யாம் அறியோம் பராபரமே. நேற்றே என் கணவரிடம் பெயர்காரணம் சொல்லத் தெரியாமல் மழுப்பி விட்டேன், இன்று உங்களிடம் விழிக்கிறேன். என் அம்மாவிடமிருந்து கற்ற (பெற்ற) இந்த குறிப்பு, பெயரும் அவர்கள் சொன்னது தான். பல வருடங்களுக்கு முன்னால் எழுதி வைத்த இந்த குறிப்பால் இப்படி மாட்டுவேனென்று நினைக்கவில்லை. தயவுசெய்து கமர்கட் செய்வ(த)து எப்படியென்று படஙகளுடன் விளக்கவும் :))

அன்புடன்,
செல்வி.

நான் செய்த கமர்கட்டை படங்கள் எடுக்கவில்லை. மற்றொரு முறை முயற்சித்து, அதனைப் படங்கள் எடுத்து வெளியிடுகின்றேன்.

அதைவிடுங்கள். உடல் நலம் சரியில்லாத தாங்கள் இரவு இத்தனை மணி(1.40) வரை விழித்து இருப்பது நல்லதல்ல. உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். நன்கு ஓய்வெடுங்கள்.

ஐஸ்.....,பாலைஸ்.....கப்பைஸ்.....சேமியாஐஸ்.....,ஐஸ்.......

டியர் மனோ,
எல்லாவற்றிலும் 1+1 தரவும். சின்ன வயதிலிருந்தே நான் ஐஸே சாப்பிட்டதில்லை, எங்கம்மா வாங்கியே தர மாட்டார்கள், டான்சில்ஸ் வருமென்று. இப்படியாவது என் ஆசை தீரட்டும். bye.

அன்புடன்,
செல்வி.

உங்களின் அன்புக்கு மிக்க நன்றி. இனிமேல் இதுபோல் நடுராத்திரியில் உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. அகலக்கற்றை (broadband) வாங்கி விட்டேன். இனி எப்பொழுது வேண்டுமானாலும் டைப் செய்யலாம். மேலும், நான் சின்ன வயதில் கமர்கட் சாப்பிட்டது, சீக்கிரமே படங்களும், கமர்கட்டும் வருமென ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.