மசாலா பொரி

தேதி: March 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசிப் பொரி - 2 கப்
வறுத்த நிலக்கடலை - கால் கப்
பொட்டுக்கடலை - சிறிதளவு
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சைச்சாறு - ஒரு சில சொட்டுகள்
ஓமப்பொடி அல்லது மிக்ஸர் - சிறிதளவு
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

பொரியோடு பொட்டுக்கடலை, நிலக்கடலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கி விடவும்.
பின் அதன் மேலே உப்பு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு முறை கலக்கவும். கடைசியில் ஓமப்பொடி, எலுமிச்சைச்சாறு கலந்து உடனே பரிமாறவும்.


தக்காளியை நறுக்கும்போது விதை மற்றும் ஜூஸை தனியே எடுத்து விடவும். வெங்காயம், தக்காளி கலந்த உடன் பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் முத்துலக்ஷமி,நாங்கள் வெங்காயம் மட்டும் சேர்ப்போம்.தக்காளி,கொத்தமல்லி எல்லாம் சேர்த்தது இன்னும் சுவையாக இருந்தது.நன்றி தோழி,உங்கள் குறிப்பிற்கு.

அன்புடன்
நித்திலா

அன்பின் முத்துலெக்ஷ்மி, மசலா பொரி நல்ல இருக்கு. ஓமப்பொடி இல்லை எனவே மிக்சர் சேர்த்தேன். சுவையாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும். (ஆனால் இன்னும் பொரி மிச்சம் இருக்கு :))
-நர்மதா:)