கம்மங்கொழுக்கட்டை

தேதி: March 28, 2007

பரிமாறும் அளவு: 30 கொழுக்கட்டைகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.


 

கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.
ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சின்ன வயதில் கிராமத்தில் சாப்பிட்ட ஞாபகம் இன்றைக்கும் இருக்கிறது. எல்லோருமே இதை விரும்பி சாப்பிடுவோம். அது ஒரு காலம். இந்த குறிப்பினை படித்தவுடன் பழைய ஞாபகம் வந்து இப்போதே செய்து சாப்பிடவேண்டும் என்று தோணுகின்றது. நன்றி.

இந்த குறிப்பை அடிக்கும் போதே, என் கணவரிடம் சொல்லிக்கொண்டே தான் அடித்தேன், சின்ன வயதில் நான் சாப்பிட்ட ஞாபகம் வந்தது (கொட்டாங்குச்சியை மொழு மொழுவென தேய்த்து, அதை கோப்பையாக பயன்படுத்தியதும், அதிலும் உடன்பிறந்தவர்களுடன் சண்டை வேறு, யாருடைய கொழுக்கட்டை பெரிது, யாருக்கு இனிப்பு அதிகம்...), அதுபோல் யாருக்கேனும் ஞாபகம் வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று. உங்களின் மடல் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மிக்க நன்றி.

அன்புடன்,
செல்வி.

எங்க பாட்டி இருந்த வரைக்கும் இந்த கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கேன். அவங்க இப்ப இல்ல :-(

எனக்கு கம்பு ல ஒண்ணும் செய்ய தெரியாது... முதல் 3 மாசத்துல ஒண்ணுமே சாப்பிட பிடிக்கலன்னு அம்மா கொண்டு வந்தாங்க... அப்ப கம்பு சாதம், இந்த சாதத்துக்குன்னே ஒரு ஸ்பெஷல் குழம்புன்னு செஞ்சு குடுத்தாங்க... அப்பறம் அதையே பானையில தண்ணி ஊத்தி வச்சு கூழ் சாப்பிட்டேன்...இப்பவும் வாய் ஊருது...

கம்பு கொஞ்சம் மிச்சம் இருக்கு . ஆனா அது தோலோட இருக்கா இல்ல தோல் எடுத்ததான்னு தெரியல... கடந்த 2 மாசமா இந்த குறிப்ப ஆசையா அப்பப்ப வந்து பார்ப்பேன்..ஒவ்வொரு தடவை பாக்கறப்பவும் கண்டிப்பா இந்த வீக் என்ட் செய்யணும்னு நினைப்பேன்.. ஆனா செய்யதான் முடியல...

எப்படா வேலைய விட்டு நிப்போம்.. ஒழுங்கா சமையல் கத்துப்போம்னு இருக்கு :-(

நேத்துதான் சுகர் டெஸ்ட் பண்ணி நார்மல் னு வந்தது.ஸோ இப்ப முடிவு பண்ணி இருகேன்.. இந்த வீகெண்ட் ஆவது செய்யனும்னு....

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.