முள்ளங்கி கார புட்டு

தேதி: March 28, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முள்ளங்கி - 1/4 கிலோ,
கடலைப்பருப்பு - 1 டம்ளர்,
பெரிய வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 10,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 8 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 தேக்கரண்டி.


 

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
முள்ளங்கியை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
கடலைப்பருப்புடன் முள்ளங்கி, உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், அரைத்த விழுதை போட்டு நன்றாக கிளறவும்.
தண்ணீர் வற்றி, உதிர் உதிராக வரும் போது, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


விருப்பமிருந்தால் எழுமிச்சம் பழ சாறு பிழிந்து இறக்கலாம். இதற்கு 2 வெங்காயம், 2 தக்காளி, 1 கேரட் பொடியாக நறுக்கி, தயிரில் உப்புடன் சேர்த்து தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று முள்ளங்கி கார புட்டு செய்தேன். வண்ணமிகு எலுமிச்சை சாததிற்கு பக்க உணவாக நன்கு பொருந்தியது. செய்யும் போது படம் எடுத்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது அனுப்ப வேண்டும்.

இப்படிக்கு
இந்திரா

indira

அன்பு இந்திரா,
பாராட்டுக்கு நன்றி. எலுமிச்சம் சாதத்திற்கு இதுவும் ஒரு பக்க உணவு என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி!

முள்ளங்கி புட்டு செய்தேன். நன்றாக இருந்ததுடன் ஒரு வித்தியாசமான குறிப்பாகவும் இருந்தது. மிளகாய் வற்றலை மட்டும் ஐந்தாகக் குறைத்துக் கொண்டேன்.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த முள்ளங்கி புட்டின் படம்

<img src="files/pictures/mulangi_puttu.jpg" alt="image" />

அன்பு சகோதரி மனோ,
நலமா? பாராட்டுக்கு நன்றி. இந்த குறிப்பு உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம்.

அழகா படமெடுத்து அனுப்பிய இந்திராவிற்கும், இணைத்த அட்மினுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா,

நேற்று ஜே மாமியின் பொரிச்ச கூட்டு வைத்து, அதனுடன் சைட் டிஷ்ஷாக இந்த முள்ளங்கி கார புட்டு செய்தேன். சும்ம அட்டகாசமான சுவையில் ரொம்ப அருமையாக இருந்தது இந்த கார புட்டு.

மிகவும் புதிதான ஒரு ரெஸிப்பி அக்கா இது. முள்ளங்கி என்றே யாரும் சொல்ல மாட்டார்கள். என் ஹஸ்க்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இனி அடிக்கடி இந்த ஐயிட்டம் எங்க வீட்டில் இருக்கும், சந்தேகமேயில்லை! அருமையான இந்த குறிப்புக்கு ரொம்ப நன்றி அக்கா!

பி.கு. நான் தயாரித்த கார புட்டை படம் எடுத்து இருக்கிறேன். இப்பொழுதே அட்மின் அவர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
என் அம்மா இப்படித்தான் வித்தியாசமாக செய்வார்கள். இன்னோரு முறையும் இருக்கு, துருவி, வதக்கி, பொட்டுக்கடலை பொடி தூவி செய்வாங்க. முட்டை பொரியல் போலவே இருக்கும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ஸ்ரீ அவர்கள் தயாரித்த கார புட்டின் படம்

<img src="files/pictures/mulla_puttu.jpg" alt="picture" />

அன்பு ஸ்ரீ,
ரொம்ப பொறுமையா வதக்கி செய்திருக்கீங்கன்னு பார்த்தாலே தெரியுது. குறிப்பை சரியா செய்திருக்கீங்க, பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.