மிளகு இறால் ப்ரை

தேதி: March 29, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
மிளகாய் - 2
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை


 

இறாலை நன்கு சுத்த்ம் செய்துக் கொள்ளவும்.சட்டியில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய இஞ்சி பூண்டு ,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாத்துள் வகைகளையும் போட்டு உப்பை தூவி நன்கு வதக்கவும்.அடுப்பை இளஞ்சூட்டில் வைத்துவிடவும்.
மசாலா நன்கு இருகியவுடன், இறாலை போட்டு கிளறவும்.இறால் வெந்தவுடன் இறக்கி விடவும்


மேலும் சில குறிப்புகள்