ஆரோக்கிய பானம்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிறிய பூசணிக்காய் - ஒன்று
வெல்லம் - அரை கிலோ
எலுமிச்சம் பழம் - 12
தேன் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி


 

பூசணிக்காயை தோலை செதுக்கி காரட் துருவியில் முழுவதுமாக துருவி கொள்ள வேண்டும்.
துருவிய உடன் பூசணிக்காயை நன்றாக பிழிந்து, வெறும் பூசணி தண்ணீரை மட்டும் எடுத்து கொண்டு அதில் வெல்லத்தை நன்றாக பொடி செய்து சேர்க்கவும்.
பிறகு தேன், எலுமிச்சம் பழசாறு, உப்பு இவற்றை போட்டு நன்கு ஒன்றாக கலக்கிவிடவேண்டும்.
பூசணி நீரில் வெல்லத்தை போட்டவுடன் நன்றாக வடிகட்டி விட்டு கடைசியாக மிளகுதூள் போடவும்.


மேலும் சில குறிப்புகள்