Hair cut

I want to cut my hair like Meena in Lakshmi(Tamil) serial.
Do any one know the style name.
Since here only salons run by North-indians I couldn't explain them.
or can any one suggest me any hair cut styles suits for south indian lady. I have a 1 yr old baby. I am fedup with long hair.

ஹலோ ஸ்ரீ தேவி, எப்படி இருக்கின்றீர்கள்? நீளமான தலை முடியால் வெறுத்துப் போய்யுள்ளீர்கள் என்று தெரிகின்றது. அதிலும் லட்சுமியில் வரும் மீனாவின் ஹேர் ஸ்டைலை போல் கேட்டுள்ளீர்கள். நான் அதைப் பார்காவிட்டாலும் நடிகை மீனாவின் ஸ்டையில் கொஞ்சம் தெரியும் என்பதால், உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கின்றேன்.
நீங்கள் உங்கள் Hair stylist யிடம் உங்களுக்கு round shape with layers என்று கேட்டுப் பாருங்கள். அதாவது முடியின் நீளம் நம்முடைய்ய தோள் பட்டை அல்லது அதற்க்கு கொஞ்ச கீழாக இருக்க வேண்டும்.அதன் அடிபாகம் round டாக இருக்க வேண்டும். முடி நீளம் அதிகமாக இருந்தால் ரவுன்ட் shape பார்வைக்கு தெரியாது. முடியின் அடர்த்தி அடுக்கடுக்காக layers இருக்க வேண்டும். இவ்வாறு கேட்டுப் பாருங்கள். இந்த ஸ்டைல் நம்முடைய்ய அலங்காரத்திற்க்கும், மற்றும் எல்லா உடையின் அலங்காரத்திற்க்கும் நன்கு ஒத்துப் போகும்.
அதன் பிறகு உங்கள் முக அமைப்பிற்க்கு ஏற்றவாறு நீங்களே நல்ல ஸ்டைலை தேர்வுச் செய்துக் கொள்ளலாம்.
முடி தானே வெட்டினால் மீண்டும் வளர்ந்து விடும். இதற்க்கும் குழந்தைக்கும் சம்பந்தமில்லை.ஆகவே துணிந்து சென்று பிடித்தமாதிரி ஸ்டையில் செய்துக் கொள்ளுங்கள். முதலிலிருந்து ஒரே stylist டிடம் சென்றால் நமக்கு நல்ல ஆலோசனைகளும் கிடைக்கும்.நன்றி.

Hi Mrs.Manohari, any ideas abt Jothika's hairstyle in 'silendru oru kadhal'?... How do I explain it to my hair stylist... Also, any suggestions as to which hairstyle would look good to leave the hair loose... my hair is a bit wavy...I would prefer an easy to maintain hairstyle...I guess the 'round shape with layers' too would look good for loose hair... My face is more of oblong shape...& my forehead is quite broad...Any suggestions?... Thanks in advance...:)

ஹலோ டிசென், எப்படி இருக்கின்றீர்கள்? நடிகை ஜோவின் ஹேர் ஸ்டைலைப் பற்றி கேட்டுள்ளீர்கள். எனக்கு நீங்கள் கூறியுள்ள திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்ல. பொதுவாக ஜோவின் முக அமைப்பிற்க்கு ஏற்றவாறு அவர்கள் முடியை குறைந்த பட்சம் தோள் பட்டை வரையிலாவது வைத்திருப்பார்கள். அது தான் அவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் உங்களின் முகம் ஒப்லாங் என்று கூறியுள்ளீர்கள்.உங்களுக்கு பொதுவாக எந்த ஸ்டைலும் ஒத்துப் போகும். ஆகவே நான் கூறும் இந்த ஸ்டைலும் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

அதாவது தற்போது உங்களுக்கு நீளமான கூந்தலாக இருந்தால் அதன் நீளத்தை குறைத்து அதாவது முதுகுவரை, அல்லது தோள் பட்டைக்கு சற்று கீழாக வரும் படி straight cut ஆக வெட்டிவிடும் படி கூறவும். இதனால் உங்களின் அலை அலையான கூந்தல் பார்க்க ரொம்ப அழகாக தெரியும்.வெட்டியயுடன் அவ்வளவாக தெரியாது ஒரிரு நாட்கள் கழித்து பார்த்தால் நல்ல லுக் இருக்கும்.முடியை கட்டும் பொழுது பட்டையான கிளிப்புகளை தவிர்த்து கொத்தாக முடியை பிடிக்குமாறு உள்ள கிளிப்புகளை போட்டால் நன்றாக இருக்கும். ஆக இரண்டுக்கும் பொருத்தமாக இருக்கும்.

முகத்தில் விழும் முடியை தாடை வரையில் ஷொர்ட் short செய்யும் படி கூறவும்.பிளேடால் சாய்வாக முடியை டிரிம் செய்வார்கள்,பார்க்க அழகாக இருக்கும்.மற்றபடி round shape வேண்டாம் முக்கியமாக layers வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
ஆகவே wavy ஹேர் உள்ளவர்களுக்கு அவர்களின் உடலமைப்பைப் பொருத்து இந்த straight cut மிகவும் அழகாக இருக்கும்.இதை குறித்து வேறு சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.நன்றி.

I'm fine...Hope the same from you...

Thanks a lot, Mrs.Manohari...I have shoulder length hair right now...since I didn't take a haircut for a few months now, it's bit longer than shoulder length...:)

Another Q I have is, my hair curls out a few days after I take the haircut... It doesn't hold the inward curl... I guess it's coz of the very soft texture of my hair & wavy nature... Do U think straight cut will look good even if it curls out?...

ஹலோ டிசென், தங்களின் பெயரை நான் சரியாக எழுதுகின்றேனா? தவறாக இருந்தால் தயவு செய்துக் கூறவும்.
பொதுவாக ஹேர் ஸ்டைல் நம்முடைய்ய முக அமைப்பிற்க்கும், முடியின் டெக்ஷ்ருக்கும், ஏற்றவாறு இருந்தால் நன்றாக இருக்கும். என்னைக் கேட்டால் உடலமைப்பிற்க்கு ஏற்றவாறு கூட அதன் தோற்றத்தை ஏற்ப்படுத்திக் கொள்ளலாம்.
வேவி டெக்ஷ்ராக இருக்கும் முடி, நீளமாக இருந்தால் தான் அழகாக இருக்கும். இல்லாவிடில் அதன் அடர்த்தி அதிகரித்து விடும். ஆனால் தங்களுக்கு மென்மையான முடி இருப்பதாக கூறியுள்ளீர்கள், ஆகவே நீளம் அப்படியே இருக்கட்டும், குறைக்க வேண்டாம் ஆனால் சிறிது லேயர்ஸ்ஸை வைத்துக் கொள்ளுங்கள்.நன்கு இடைவெளி விட்டு கீழிலிருந்து மேலாக காது வரையில் இருக்கும் படி லேயர்ஸ் வேண்டும் என்று stylistடிடம் கூறவும். இதனால் நீங்கள் கூறியுள்ளதுப் போல் சுருட்டாது.முடி வெட்டி பல வாரங்களானாலும் மாற்றமிருக்காது.
மற்றபடி straight cut ல் தங்களுக்கு சந்தேகமிருந்தால், straight cut ஆகவும், அதே நேரத்தில் சற்று அன்யீவனாகவும் இருக்கும் படி செய்துக் கொள்ளுங்கள்.ஒகேவா, நன்றி.

எனது முடி சுருட்டை அதெ சமயம் வறன்ட முடி பார்ட்டி டைம் வரும் போது விரித்து விடலாம் என்றால் புஸ் என்று நிக்கிறது.எனது முடி தோல் பட்டைக்கு கிலே இருக்கிரது.ஹேர் ஸ்டைலரிடம் போனதர்க்கு லேயர்ஸ் வைத்து கட் செய்து விட்டார்கல்.ஆனால் முடியின் நிளத்தை குறைக்க வேன்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் விரித்து விட்டால் அழகாக நேராக சீராக நிர்ப்பதில்லை.ஏதேனும் யோசனை சொல்ல முடியுமா மேடம்?

Thanks, Mrs.Manohari. Neengal en peyarai sariaaga thaan eluthukireergal :) The username is a small bit from my real name. So it might sound odd.

Sorry to bother you again. I didn't understand what u meant by 'straightcut but bit uneven'???!!!. If I try layers, should it be straight or round shaped?.

I thought of trying out straight cut first & if it doesn't suit me, I'll try layers. Coz if I try layers first, I'll have to wait until the hair grows back again if I want to change the hairstyle.:) BTW, I'm of normal built but of average(or should I say short) height-around 153 cms.Hope these hairstyles will suit my body structure too.

ஹலோ டிசென், முடியின் நீளத்தை வெட்டும் பொழுது straight cut என்பது ஒரே சீராக வெட்டுவது மட்டுமல்ல, அதே cut ல் கூட பல விதங்களில் வெட்டுவார்கள் அவ்வாறு வெட்டும் விதத்தில் uneven என்று கூறினால் அது எந்த shape குறிப்பிட்டு கூறமுடியாதபடி, முடியின் நீளத்தையும், அடர்த்தியைக் கொண்டு வெட்டி விடுவார்கள் என்று நினைத்தேன்.நீங்கள் மென்மையான முடி என்று கூறியிருந்தபடியால் layers ஆல் வால்யூம் கிடைக்கும் என்றும் கருதினேன்.
நீங்கள் கூறியுள்ளதுப் போல் செய்தாலும், உங்களின் உடலமைபிற்க்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் முடியின் அடர்த்தி சுமாராக இருந்தால் layers சும் தேவைப்படாது.
இதுபோல் ஹேர் ஸ்டையில் என்பது ஒன்ருக்கொன்று மாறுபடும். ஆகவே நீங்கள் நினைப்பதுப் போலவே கட்செய்து பிறகு படிப்படியாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். நன்றி.

ஹலோ பர்வின்பானு, எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் சுருட்டை முடியின் நீளத்தைக் தங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறியுள்ளதுப் போல் குறைக்க கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு நீளத்தை பராமரிக்க முடியுமோ அவ்வளவு நீளம் இருந்தால் நல்லது தான்.இதனால் புஸ் என்று மேலும் தெரியாது. ஆகவே முடியின் நீளத்தை குறைக்கும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள்.நல்ல தரமான எண்ணெய் பசையுள்ள ஷாம்பு ,மற்றும் கன்டிஷனரைப் பயன்படுத்துங்கள். சலூனில் கிடைக்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தால் முடிக்கு மற்ற பொருட்களைப் போல் வறட்ச்சி தன்மை ஏற்ப்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
நீங்கள் முடியின் அடர்த்தியை கட்டுப்படுத்த சில ஸ்பிரேயர்கள் உள்ளன அதை வாங்கி நீங்கள் விருப்பும் நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். அல்லது hair straightner ரைக் கொண்டு பார்ட்டிகளுக்குச் செல்லும் போது மட்டும்,முடியை சீராக்கிக் கொள்ளலாம். முடிக்கு பாதகமில்லாத செராமிக் கற்கலாலான straightners இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கின்றது.முயர்ச்சி செய்துப் பாருங்கள். நன்றி.

oh...ok... en mudi satru adarthiyaga thaan irukkum(moderately dense)... I have not madeup my mind if to go for straight cut or layers... I'll be going to the hairstylist next week... I'll let you know what style I choose & how it turns out... Thanks a lot Mrs.Manohari, for answering all my Q's patiently... Your guidance is of immense help...

மேலும் சில பதிவுகள்