சீஸ் டைமண்ட் கட்ஸ்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு - 3 கப்
கடலைமாவு - ஒரு கப்
துருவிய சீஸ் - அரை கிராம்
மோர் - அரை கப்
பால் - தேவையான அளவு
வற்றல் தூள் - 2 தேக்கரண்டி
சுக்குத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

மைதாமாவு, கடலைமாவு, வற்றல் தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள், உப்புத்தூள், சீஸ் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயைச் சுட வைத்து மாவில் ஊற்றவும்.
அத்துடன் மோர், பால் இவற்றைச் சேர்த்து மாவை பூரி மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அரைமணி நேரம் கழித்து மாவை பூரிப்பலகையில் விரித்து, டயமண்ட் வடிவில் வெட்டி பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்