சில்லி சிக்கன் சாண்ட்விச்

தேதி: March 30, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாண்ட்விச் பிரெட் - 6
லட்டுஸ் - கொஞ்சம்
தக்காளி - 3
வெள்ளரிக்காய் - 1
புதினா சட்னி - 6 ஸ்பூன்
தக்காளி சட்னி - 6 ஸ்பூன்
எலும்பு இல்லாத சிக்கன் - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்


 

தக்காளி, வெள்ளரிக்காய் வட்டமாக நறுக்கவும்.
சிக்கன், உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தயிர் போட்டு 6 மணி நேரம் ஊற விடவும்.
சிக்கனை க்ரில் வைத்து வெந்ததும் சிறியதாக நறுக்கவும்
க்ரில் இல்லை என்றால் தோசைக்கல் மேல் வைத்து சுடவும்
பிரெட்டின் மேல் பட்டர் தடவி டோஸ்ட் பண்ணவும்.
வட்டமாக நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய், லட்டுஸ் பிரெட் நடுவில் வைக்கவும்.
புதினா சட்னி, தக்காளி சட்னி பிரட் மேல் தடவவும்.
சிறியதாக நறுக்கிய சிக்கனை உள்ளே வைத்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்