ஹைதராபாத் மட்டன் பிரியாணி

தேதி: March 30, 2007

பரிமாறும் அளவு: 5 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டனுடன் பிரட்டி வைக்க:
மட்டன் - 1/2கிலோ
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
தயிர்- 1/2கப்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
பமிளகாய்- 5 (இரண்டாக நறுக்கி போடவும்)
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்
எலுமிச்சை - 1
உப்பு- தேவைக்கு
பொடியாக நறுக்கிய புதினா, கொ.மல்லி - 2ஸ்பூன்கரம் மசாலா:
ஷாஜீரா - 25கிராம்
பட்டை- 25கிராம்
ஏலக்காய்- 25கிராம்
மிக்ஸீயில் அரைத்து தேவைக்கு பயன்படுத்தவும்
பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ
ஷாஜிரா- 1ஸ்பூன்
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 4
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4கரண்டி
பல்லாரி- 3
எலுமிச்சை- 1
கேசரி மஞ்சள் கலர்- 1சிட்டிகை


 

குக்கரில் மட்டன் கலவையினை 1டம்ளர் தண்ணீர் ஊற்றி 5வீசில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஷாஜீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும் கொதி வரும் பொது அரிசியை சேர்க்கவும்.
அரிசி 1/2பாகம் வெந்தவுடன் வடிகட்டி உதிரியாக சாதத்தை எடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த மட்டனை போட்டு அதன் மேலே பொறித்த வெங்காயத்தை தூவவும். சுற்றி வரை பாதி எண்ணெய் ஊற்றவும். அதன் மேலே சாததைய் போடவும் மேலே மீதி பொறித்த வெங்காயம் எண்ணெய்யை சுற்றி வரை தூவவும்.
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
கேசரி கலர்வுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றாவும்.
எலுமிச்சை சாரை சுற்றிவரை பிழிந்து விடவும்
பிறகு நன்றாக இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் வைக்கவும்.
ஆவி வெளி வரும் பொது குறைந்த தணலில் 15நிமிடம் வைத்து இறக்கவும்.
மூடிக்கு மேலே எதாவது கனமான பொருளை வைத்தால் ஆவி அதிகம் வெளி போகாமல் தம்மில் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஷாஜீரா என்றால் என்ன?

ஷாஜீரா பற்றி ஒரு பெரிய விவாதமே மன்றத்தில் நடந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ கிளிக் செய்து பார்வையிடவும்.

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/3327">http://www.arusuvai.com/tamil/forum/no/3327</a>

மிக்க நன்றி.

how to make hydrabadi veg briyani

சிறிது காலம் எனக்கு உடல் நிலை சரியில்லாததால் அறுசுவை பக்கமே வரவில்லை. இன்று தான் பார்த்தேன். நீங்கள் கேட்ட வெஜ் பிரியாணி கூடிய விரைவில் சொல்லுகிறேன்.
தாமதமாக பதில் சொல்லுவதற்க்கு மன்னிக்கவும்.

faizakader

ஹல்லோ மேடம் , தங்கள் நற்சுகம் பெற என் வாழ்த்துக்கள்