அவசர பருப்பு

தேதி: March 31, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 2
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - இருபது
தக்காளி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
மல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
வற்றல் - 2
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், சீரகம் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு 2 விசில் விடவும்.
எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் இரண்டு சின்ன வெங்காயங்களைத் தட்டி சேர்த்து, நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து அரைத்த பொடியை பருப்பில் கொட்டி, மல்லி இலையும் தூவி கொதிக்க விடவும்.


மேலும் சில குறிப்புகள்