பலாக்கொட்டை கறி

தேதி: March 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலாக்கொட்டை - 25
மசாலாதூள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1/4 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது


 

முதல் நாள் இரவில் பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கி விட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற போடவும்.

மறு நாள் காலையில் மேலே இருக்கும் தோலை நீக்கி நன்கு கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.சிறிது தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தில் சிறிது போட்டு தாளித்து நறுக்கிய பலாக்கொட்டை,வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.பின் மஞ்சள் தூள்,மசாலாதூள்,உப்பு போட்டு பச்சைமிளகாயை இரண்டாக கீறி போடவும்.பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.சிறிது நேரம் கழித்து தேங்காய் விழுதை போட்டு நன்கு கிளறி தீயை மிதமானதாக வைத்து வேக விடவும்.பலாக்கொட்டை நன்கு வெந்தததும் தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் வேகவிடவும் பின் எண்ணெய் தெளிந்து வரும் சமயம் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்