தேங்காய்பால் ரசம்

தேதி: March 31, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்பால்- 1/2மூடி
தக்காளி- 2
புளி கரைசல்- 1/4டம்ளர்
மிளகுத்தூள்- 1/2ஸ்பூன்
சோம்புத்தூள்- 1/2ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
தாளிக்கு:
கடுகு- 1ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவைக்கு
வத்தல்- 1


 

தேங்காயை துருவி 2டம்ளர் பால் எடுத்து வைக்கவும்.
பாலுடன் தக்காளியை பிசைந்து விடவும்.
இதனுடன் புளி கரைசல், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்த்தூள் சோம்புத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
சட்டியில் கொஞ்சம் எண்ணெய் காய்ந்த பின்பு கடுகு கறிவேப்பிலை வத்தல் போட்டு தளிக்கவும்.
பிறகு தேங்காய்பால் ரசதினை ஊற்றவும்.
மிதமான சூடனதும் இறக்கவும்.
மேலே கொ.மல்லி தூவி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்