இஞ்சி சிக்கன் ஸ்ட்டூ

தேதி: April 1, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 250 கிராம்
மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 25 கிராம்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு.
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - இரண்டு
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 150 மில்லி


 

இஞ்சியை துருவிக்கொள்ளவும். மிளகாய் கீறவும். கோழியை நன்கு சுத்தம் செய்து, அதில் அரை தேக்கரண்டி உப்பு, இஞ்சி, மஞ்சள் தூள் பாதி தேங்காய் பால் ஊற்றி மிளகாய் போட்டு சிம்மில் வைத்து வேகவிடவும்.
சிக்கன் கலவையில் மீதி தேங்காய் பால், சீரகத் தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி கொதிக்கவைத்து இறக்கவும்.
சட்டியில் வெண்ணெயில் வெங்காயம், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கி கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்