கறி வறுவல்

தேதி: April 2, 2007

பரிமாறும் அளவு: 4members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - 1/4 கிலோ
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
தனியாத்தூள்- 1ஸ்பூன்
கரம் மசாலா- 1ஸ்பூன்
தயிர் - 3ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 1ஸ்பூன்
உப்பு
இவை அனைத்தயும் ஒன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 வீசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.
வெங்காயம் - 2
தக்காளி - 1
க.பிலை - கொஞ்சம்
தேங்காய் பால் - 4ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2ஸ்பூன்
எண்ணெய் - 2ஸ்பூன்


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் க.பிலை போட்டு வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின்பு வேக வைத்த கறியை சேர்த்து வதக்கவும்
பின்பு தேங்காய்பால் ஊற்றி திக்காக வந்தவுடன் இறக்கவும்
எலுமிச்சைசாறு மேலே ஊற்றி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஃபாய்ஜா மிச்சதேல்லாம் எழுத மறந்துட்டீங்களா?

ஹாய் ரூபி
நடுவில் அவர்கள் கறியை வேக வைக்கும் போது சிலவற்றை போட சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்...

ஆன் கரெக்ட் தான் சுபா...நாளைக்கு செய்யனும் மட்டன்..நாங்க சாப்பிடாததால எப்பவாவது செய்யும்போது செய்தா நல்ல வருமானு பயம்.