பருப்பு கீரை

தேதி: April 2, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 1/4 கப்
எலுமிச்சை பழம் - 1/2
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 1
வெங்காயம் - 1


 

கீரையில் இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து எடுத்து நறுக்கி அதனை எடுத்து கழுவி நீரை வடிய விடவும்.
துவரம் பருப்பில் கீரை போட்டு அத்துடன் தக்காளி, வெங்காயம், சாம்பார் பொடியும், மஞ்சள் பொடியையும் சேர்த்து வேக விடவும்.
கீரையும், பருப்பும் சேர்ந்து வெந்த பின் எலுமிச்சை பழம் கரைசலை அதில் ஊற்றவும்.
வாணலியில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
எலுமிச்சை பழம் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டாம்.


எலுமிச்சை பழம் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டாம்

மேலும் சில குறிப்புகள்