white onion, yellow onion, red onion>>

which is good or which is tastier for our southindian type cooking? Please, if anyone knows this, do tell me. It will be helpful not only me, people staying or living in USA too.

I prefer red onion. It is the best for Indian cooking,IMHO.

CAN YOU TELL ME ? PLEASE IMHO???

பெயர்ப்பதிவையே தமிழில் செய்துள்ள தாங்கள் (நான்கூட செய்யவில்லை. ஒருசிலர்தான் செய்துள்ளார்கள்), ஒருவர் ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார் அல்லது கேள்வி கேட்டுள்ளார் என்பதற்காக ஆங்கிலத்தில் மறுபதிவு செய்யலாமா? முன்பே (சோடா உப்பு பதிவில்) இது குறித்து தங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். விருந்தினர் பதிவேட்டில்கூட ஒரு பெரிய உரையாடல் நடந்தது. நமது தமிழ் மொழியில் கேட்கும்போது கேள்விகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தவறில்லாமல் கேட்க முடியுமே..

IMHO என்றால் என்னவென்று நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக அர்த்தம் செய்து கொண்டு இதற்கு பதில் கொடுக்கின்றேன்.

"என்னுடைய தாழ்மையான கருத்தின்படி" (In My Humble Opinion - IMHO)

ஹலோ ஸ்ரீதேவி, எப்படி இருக்கின்றீர்கள்? நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று வகையான வெங்காயமும் நம்முடைய்ய சைவ, அசைவ, ஆகிய இரண்டு வகை சமையலுக்கும் ஏற்றதாகத் தான் உள்ளது. ஆனாலும் அதன் காரதன்மைக்கு ஏற்றார் போல் சமையலுக்கு அதைப் பயன் படுத்தினால் சமையலில் அதன் ருசியைக் கூட்ட உதவும். ஆகவே நான் பயன்படுத்தும் முறைய்யை கூறுகின்றேன்.

வெள்ளை, மற்றும் வெளிர் மஞ்சள் நிற வெங்காயம்= அசைவ சமையலுக்கு சுவையை கூட்டும்.முக்கியமாக ஆடு, மாடு, கோழி.
மேலும் வட இந்திய மசாலாக்களுக்கும் இந்த வகைகள் நல்ல சுவையைத் தருகின்றது.

சிவப்பு நிற வெங்காயம்= சாலட், பச்சடி மற்றும் அனைத்து தென்னிந்திய சைவ வகை சமையலுக்கும் சுவைய்யை கூட்டுகின்றது.
சிறிய வகை சிவப்பு வெங்காயம்(shallots)= தாளிப்பு போன்ற சிறிய வகையான முறைகளுக்கு நல்ல ருசியை தருகின்றது.நன்றி.

குற்றம் கண்டு பிடிப்பதில் அப்படி என்னய்யா, உமக்கு சந்தோசம்.
இது என்னுடைய்ய In My Hesitating Opinion- IMHO அல்ல. இது எப்படி இருக்கு?நன்றி.

"என்னய்யா" என்று எழுதியுள்ளதை வைத்து என்னை நோக்கித்தான் அந்த கேள்வியைக் கேட்டு இருக்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். எந்த குற்றத்தை நான் கண்டிபிடித்துள்ளதாக எழுதியிருக்கின்றீர்கள்?

நன்கு தமிழில் டைப் செய்யத்தெரிந்த ஒருவரிடம் ஆங்கிலத்தில் பதிவுகள் எதுவும் செய்யவேண்டாம், தமிழில் பதிவு செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்தது குற்றம் கண்டுபிடிப்பா?

இது எனது பொதுவான வேண்டுகோள்தானே.. எல்லோரிடமும் இதைத்தானே நான் வலியுறுத்தி வருகின்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சகோதரி அஸ்மா, நீங்கள், நான் மூவரும் இதைப் பற்றிதானே விவாதித்தோம்.

உங்கள் கூற்றின்படி அது குற்றம் என்றால், அதை எடுத்துக்கூறி அப்படி இல்லாமல் செய்வது அறுசுவைக்கு நல்லதுதானே.. என்னை குற்றம் கண்டுபிடித்து மகிழ்பவன் என்று பகிரங்கமாக வெளிச்சமிட்டு காட்டியமைக்கு நன்றி.

திரு அட்மின் அவர்களுக்கு, கொஞ்சம் விட்டு பிடிக்கலாமே என்ற அர்த்தத்தில் அவ்வாறு எழுதிவிட்டேன்,தவறினை உணர்ந்தேன்.மன்னிக்கவும். நன்றி.

வயதில் மூத்தவராகிய தாங்கள் மன்னிக்கவும் என்பது போன்ற பெரிய வார்த்தைகளை சொல்லுவது மனதிற்கு தர்மசங்கடமாக இருக்கின்றது.

சகோதரி அஸ்மா அவர்கள், கண்டிப்பாக எல்லோரும் தமிழில் டைப் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள் என்று சொன்னபோது நான் கொடுத்த பதிலைத்தான் மீண்டும் இங்கே கொடுக்க வேண்டியுள்ளது.

இதை நான் கட்டாயப்படுத்த முடியாது. எல்லோராலும் எல்லா நேரங்களிலும் தமிழில் டைப் செய்ய முடியாது. எழுத்துதவி பக்கம் எல்லா browserலும் பணி புரிவது கிடையாது. சிலருக்கு தமிழை படித்துவிட முடியும். ஆனால் எழுதுவதற்கு தடுமாறுவார்கள். இவர்களையும் கருத்தில் கொள்ளவேண்டியிருப்பதால், தமிழில்தான் அனைவரும் கண்டிப்பாக டைப் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தி செய்ய வைக்க இயலாது.

புதிய தளம் ஆரம்பித்த தினத்தில் இருந்தே முதல் பக்கத்தில் "அன்பு வேண்டுகோள்" என்று தலைப்பிட்டு தமிழில் டைப் செய்ய முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். ஆகவே இது நான் இன்று நேற்று வைக்கும் வேண்டுகோள் அல்ல. பலர் எனது வேண்டுகோளை ஏற்று தமிழில் டைப் செய்ய முயற்சிகள் எடுத்து வெற்றி கண்டுள்ளனர். சிலர் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை.

நாம் செய்யும் பதிவுகள் பார்க்கும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், தமிழில்தான் டைப் செய்யவேண்டும். இந்த தளத்தை பார்வையிடும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனால், அனைவருக்கும் தமிழ் நன்கு தெரியும்.

திருமதி. தளிகா போன்ற மலையாளத்தை தாய்மொழியாய் கொண்டுள்ள சகோதரிகள்கூட அழகிய தமிழில் பதிவுகள் செய்கின்றனர் எனும்போது, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தவறக் கூடாது.அது தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி. அதுவும் பிறர் மனதை புண்படுத்தி விட்டால் அவர்கள் காலில் விழக்கூட தயங்கக் கூடாது. இதில் வயது வித்தியாசத்திற்க்கு இடமில்லை. சாதாரணமாக ஒரு முறைக்கு இருமுறை வாசித்து பார்த்து தான் பதிவுகளை அனுப்புவேன். இந்த முறை கொஞ்சம் ஈஸியாக இருந்து விட்டேன். ஆகவே தான் இந்த தவறு நடந்து விட்டது. மீண்டும் இதுப் போன்ற பதிவுகளை தவிர்ப்பேன் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், நிச்சயம் முயற்சி செய்வேன். நன்றி அட்மின்.

இனி அனுப்பும் எல்லாவற்றையும் தமிழில் அனுப்புகிறேன் இந்த முறை மன்னிக்கவும்
நன்றி மனோகரி மேடம்

மேலும் சில பதிவுகள்