சிறுபயறு உருண்டை

தேதி: April 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுபயறு - 2 கப்
தேங்காய் பூ - 1/2 கப்(துருவியது)
சீனி - தேவையான அளவு
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
புட்டு - 5
உப்பு - சிறிது


 

முதலில் சிறுபயறை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் காலையில் சிறிது தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

பின் நன்கு வெந்ததும் இறக்கி துருவிய தேங்காய் பூ,புட்டு,பொடியாக நறுக்கிய முந்திரி ,கிஸ்மிஸ் ,தேவையான அளவு சீனி சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகள் செய்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கதீஜா,
இதில் சொல்லியிருக்கும் புட்டு என்ன என்று தெரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்களேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா. புட்டு என்றால் பதனியில் செய்வது. பதனீரை எடுத்து காய்ச்சி புட்டு செய்வார்கள். வட்டு, புட்டு என்று சொல்வார்கள் எங்கள் ஊரில். உங்கள் பக்கம் எப்படி சொல்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

அன்புடன் கதீஜா.

புரிந்துவிட்டது கதீஜா. பதிலளித்தமைக்கு நன்றி. சமீபத்தில் வேறு ஒரு த்ரெட்டிலும் வட்டு பற்றிப் பார்த்தேன். அண்ணளவாக எத்தனை கிராம் வரும் என்று சொல்லமுடியுமா? என்னிடம் கித்துள் கருப்பட்டி இருக்கிறது. இதற்குப் பதில் அதனைப் பாவிப்பேன். நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா புரிந்துவிட்டதா நல்லது.அப்புறம் புட்டு என்பது சிறியதாக இருக்கும் ஒரு இஞ்ச் அளவில் வட்டமாக இருக்கும். இது வாசனை மற்றும் சுவைக்காக சேர்ப்போம். நீங்கள் இனிப்பு சேர்க்கும் போது கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும்.

அன்புடன் கதீஜா.

மிக்க நன்றி கதீஜா. நலமா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க. செய்து பார்த்துட்டு கருத்து சொல்லுங்க.உடம்புக்கு மிகவும் சத்தானது.சுவையும் நல்லா இருக்கும்.

அன்புடன் கதீஜா.