நவதானிய மிக்சர்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - கால் கிலோ
பாசிப்பயிறு - கால் கிலோ
தட்டப்பயிறு - கால் கிலோ
காய்ந்த பட்டாணி கடலை - 100
காணப்பயிறு - 200 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு
வற்றல் தூள் - தேவையானஅளவு
உப்புத்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
சீரகத்தூள் - தேவையான அளவு


 

பட்டாணிகடலையை 48 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பாசிப்பயிறு, தட்டப்பயிறு, காணப்பயிறு மூன்றையும் 24 மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். 12 மணி நேரத்திற்கு பிறகு ஒரு தடவை தண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
பயிறு வகைகள் சுருக்கம் இல்லாமல் முளை கிளம்பும் பக்குவம் வரை ஊறவைக்கவும்.
பின்பு ஊறின பயிறு வகைகளை கழைந்து தனித்தனியாகக் தண்ணீர் வடியவைத்து எண்ணெயில் ஒவ்வொன்றாக சிறிது, சிறிதாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லாவற்றையும் கலந்து கருவேப்பிலையை பொரித்துப் போட்டு தேவையான வற்றல் தூள், உப்புத்தூள், கொத்தமல்லி, சீரகத்தூள் கலந்து உபயோகப்படித்திக்கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்