குடல் கறி

தேதி: April 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குடல் - 1
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - பாதி
தக்காளி - 2 சுமாரானது
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 3
கிராம்பு - 4
கத்தரிக்காய் - 1
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
ரம்பை இலை - சிறிது
தயிர் - 1 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது


 

முதலில் குடலை நன்கு சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள் சேர்த்து நன்கு வரட்டிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.சிறிது தக்காளி,வெங்காயம் தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.

பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும்.

கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

பின் வரட்டியதில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,சிறிது கருவேப்பிலை,மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு , 1/2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து,வெங்காயம்,கருவேப்பிலை போடவும்.பின் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,தயிர் ,தக்காளி,ரம்பை இலை போட்டு வதக்கவும்.

பின் பிரட்டிவைத்த குடல் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் குக்கருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து பின் மூடியை திறந்து தேங்காய் பால்,கத்தரிக்காய் சேர்த்து தீயை மிதமானதாக வைத்து வேகவிடவும்.நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்


கடலை பருப்பு விரும்பினால் சேர்க்கலாம் அப்படி கடலை பருப்பு சேர்ப்பதாக இருந்தால் பருப்பை முதலில் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு குடல் அரைவேக்காடு வெந்து இருக்கும் போது தேங்காய் பால் ஊற்றும் முன்னால் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்