பாதாம் அல்வா

தேதி: April 5, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெய் - 100 மில்லி
பாதாம் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
சீனி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
முந்திரிப்பருப்பு - 15
கேசரி பவுடர் - 2 சிட்டிகை


 

பாதாம் பருப்பை சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்து வைக்கவும். அதை அரைக்கவும்
ஒரு அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் ஊற்றி, கொதிக்க விடவும். கேசரி பவுடரை கரைத்து, அதில் அரைத்த பாதாம் மற்றும் சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். சுவையான அல்வா ரெடி


மேலும் சில குறிப்புகள்