SOFT இடியாப்பம்

இடியாப்பம் மிருதுவாக வர நான் என்ன செய்ய வேண்டும்?ஒவ்வொரு முறையும் நான் இடியாப்பம் செய்யும் போது ஒன்று உதிர்ந்துக்கொட்டிவிடும் இல்லையில் ரப்பர் போல் இருக்கும்.தயவு செய்து உதவவும்.நன்றி.

ஹெல்லோ , நலமா.சுடு தண்ணிர் வைத்து முயன்று பாருங்கள்

1 சிட்டிகை சோடா உப்பு சேருங்கள். கலர் சிறிது மங்கலாக வரும். ஆனால் பஞ்சு போல் இருக்கும்.

அரிசிமாவை வறுத்து விட்டு பாதி சூடுநீர் ஊற்றி கிளரி 2 நிமிடங்கள் கழித்து பாதி தண்ணீர் போட்டு செய்து பார்க்கவும்
தண்ணீர் சரியான அளவு ஊற்றவும்

நான் இப்படித்தான் பன்னுவேன்

இடியாப்பம் மிருதுவாக வர முதலில் பொடி அரிசிமாவு (வறுத்தது) அதில் தேவையான அளவு உப்பு போட்டு பின் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து ( நல்ல கொதிக்கும் தண்ணீர்)தேவைக்கு அதிகமாகவே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அடுப்பை அணைக்க வேண்டாம் தண்ணீர் கொத்தித்துக்கொண்டே இருக்கட்டும். அதை ஊற்றி ஒரு அகப்பையின் பின் புறம் உள்ள கம்பியால் விடாது கிளறவும்.கிளறிவிட்டு தண்ணீர் போதவில்லை என்றால் கொதித்துக்கொண்டு இருக்கும் தண்ணீரை ஊற்றி நல்ல கிண்டவும் நல்ல கொதிக்கும் தண்ணீரில் செய்வதால் அதிலேயே மாவு கிண்டும் போதே வ்ந்துவிடும் இப்பொழுது அச்சில் மாவைபோட்டு இடியாப்பம் பிழிந்து வேகவிடவும் 5 நிமிடத்தில் வெந்துவிடும்.சுட்ட இடியாப்பத்தை சூடாகவைக்க ரைஸ் குக்கரில் உள்ள சட்டியில் வைத்து வார்மரில் போட்டு வைக்கவும் நீங்கள் சாப்பிடும் வரை சூடாகவும் அதே சமயம் மெதுவாகவும் இருக்கும்.மாவு கிண்டும் விதம் தான் இடியாப்பம் மிருதுவாக வரும் இதே போல் செய்து பாருங்களேன்.ரப்பர் போலும் வராது உதிர்ந்தும் போகாது.மாவை இடையாப்பம் பிழிந்துவிட்டு மீதி உள்ள மாவை மூடிவைக்கவும் அதன் ஈரத்தன்மை காய்ந்துவிட்டாலும் மிருதுவாகவராது பிழியும் போதும் கடினமாக இருக்கும்.திரும்பவும் மாவை அச்சில் போட முன்னாடி சிறிது தண்ணீர் மாவில் தெளித்து கொண்டு கொஞ்சம் கிண்டவும் பின் அச்சில் போட்டு பிழிந்து இடையாப்பம் சுடவும். மிகவும் மிருதுவாக வரும். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
நன்றி

வணக்கம்.ஹவ்வா,Cபாணு,ஸ்ரீதேவி,சயிட்கதிஷா.
பெயர் பிழையாக இருத்தால் மன்னிக்கவும்.உங்கள் அனைவரின் கருத்துக்கு நன்றி முயற்ச்சி செய்த்து பார்க்கின்றேன்.மேலும் கேள்விகள் இருத்தால் கேட்க்கின்றேன்.நன்றி.

இடியாப்பம் மைக்ரேவேவ் அவனில் வேக வைக்க முடியுமா ?

சைய்யது கத்திஜா அவர்களுக்கு மீதம் உள்ள மாவை மீன்டும் கிண்டும் போது சிரிது நீர்தெளிக்க சொல்லியிருக்கின்ரிர்கள்,அது கொதிக்கிர தண்ணிரையே மீண்டும் சூடாக போட்டு கிளரனுமா?சாதாரண தண்ணிர் தெளித்தால் போதுமா?

கொதிக்கும் நீரை இல்லை சாதாரண தண்ணீரே போதும்.மைக்ரோவேவில் இடியாப்பம் வேகவைக்கலாமா என்று எனக்கு தெரியவில்லை .
நன்றி

உங்கள் உடனடி கருத்துக்கு மிகவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்