முட்டை பிரியாணி

தேதி: April 6, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

முட்டை - 5
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் -150 கிராம்
தேங்காய்ப்பால் - 150 கிராம்
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்+நெய் - 100கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு


 

அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக் கொள்ளவும். அதை லேசாக கீறிக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மசாலாத்தூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும்.
பின் தேங்காய்ப்பால், தயிர் ஊற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும். பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும். கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

brindacs
sounds very delecious eassy too i m going to try tommorw
could you please tell me tsis 150gms equal to how many cups (rise cooker cup)

brindacs

கப் நிறைய மேல் வர வேன்டாம்
1 ,rise cooker cup--150gms

நான்கு கப்(ரைஸ் குக்கர் கப்) போடுங்கள் சரியாக வரும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

i prepared egg briyani.it came very well.i tried many recipies .it is very nice.i think i eat indian foods preapring in my home.we miss since we are in USA.hats off arusuvai.continue to rock.

ஹாய் பூர்ணிமா எப்படி இருக்கிறீர்கள் முட்டை பிரியாணி செய்து நன்றாக இருந்தது என்று சொன்னீர்கள் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் (என்றால்? விளக்கமாக சொல்லுங்க மேடம். எப்படி வைக்கவேண்டும்?)

paapu

paapu

Dear madam,
can u plz give the measurements of onion and tomato in grams?Thanks in advance.

தக்காளி 250கிராம் வெங்காயம் 200கிராம் அளவில் உபயோகித்து பாருங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

Dear julaiha madam,
Thanks for your quick response for clearing my doubt.I will try out soon and let you know the feedback madam.

Thanks
Nirupama

Dear madam,

u asked to add 1 cup of water after adding coconut milk and curd.1 cup means about howmuch ml? I want to try this soon.please reply me.Thanks in advance.

வணக்கம்
இந்த பிரியாணி எங்களது விருப்ப உணவாகி விட்டது. மிகவும் அருமை.
நன்றி.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

I made egg biriyani, It's really super.

பிரபா&புகழேந்தி

இப்பொழுதுதான் பார்த்தேன் செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

கரம்மசாலா தூள்/மிளகாய் தூள்/இஞ்சிபூடுவிழுது - கரண்டி அளவில் நீங்கள் கொடுத்திருப்பது டீஸ்பூன் அளவா அல்லது டேபிள்ஸ்பூன் அளவா.

ரெஸிபி செய்து பார்க்க விருப்பம்.நன்றி.

டேபிள்ஸ்பூன் அளவுதான் மூன்றும் யாரும் சமைக்கலாமிம் படத்துடன் உள்ளது அதை பார்த்து செய்துவிட்டு சொல்லுங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!