Respected Admin

Respected Admin,
I am enjoying this site. I am really very happy that we have a tamil website for us. I am referring this site to all of my friends.
I really appreciate you for giving us such a great website. No one can beat our "yaarum samaikkalaam".
We all are eager to know whom you are, how you started this site, what are you currently doing, what can we do for u etc.
Want to know more about you. Why can't u create a page for you, so that we all can know about u.

Getting benefits from your website, in return what can we do?

sridevi.

Thanks a lot for your service.
this arusuvai.com is a fantastic web site in tamil.
After registering in this,first of all, i should thank u.sorry for the delay. all the best for you and your team.

anbudan,
vidyavasudevan.

anbudan

சகோதரிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த ஒரு வாரம் சென்னையில் தொடர்ந்து அலைச்சலில் இருந்த காரணத்தால், இணையத்தின் பக்கம் வர இயலவில்லை. அதனால் உடன் பதில் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

சகோதரி வித்யா வாசுதேவன் அவர்களுக்கு, தாமதமாக பாராட்டுகள் தெரிவிப்பதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கின்றீர்கள். அது தங்களின் நல்ல உள்ளத்தை அடையாளம் காட்டுகின்றது. வார்த்தைகளில்தான் பாராட்டை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. இது பயனுள்ள தளம் என்று நீங்கள் மனதில் நினைத்தாலே போதும். அதுவே எனக்கு பெரிய பாராட்டு.

சகோதரி ஸ்ரீதேவி அவர்களுக்கு முன்பே பதில் அளிப்பதாக கூறியிருந்தேன். இயலாமல் போய்விட்டது. உங்கள் தோழிகள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் அறுசுவையை அறிமுகப்படுத்துவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் உதவியால்தான் அறுசுவை இந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதுவரை நான் அறுசுவை குறித்து எங்கும் விளம்பரம் செய்தது கிடையாது. இப்படி ஒரு தளம் இருப்பதை பரப்ப வேண்டும் என்று பெரிய முயற்சிகள் எதுவும் எடுத்தது கிடையாது. தங்களைப் போன்ற நேயர்கள்தான் அறுசுவையை தமிழ் உலகம் அறியச் செய்திருக்கின்றீர்கள். இதற்கு நான் தான் தங்களுக்கு கடன்பட்டுள்ளேன்.

என்னைப்பற்றின தகவல்களையும் கேட்டிருக்கின்றீர்கள். நான் அவ்வபோது என்னைப் பற்றி மன்றத்தில் மற்றும் பல இடங்களில் குறிப்பிட்டு வருவதால், எனக்கென்று தனியாக ஒரு பக்கம் ஒதுக்கிக்கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, அப்படி பக்கம் ஒதுக்கி என்னப்பற்றி தம்பட்டம் அடிக்கும் அளவிற்கு பெரிதாக விசயமும் ஒன்றும் இல்லை.

அறுசுவை தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதால், விரைவில் நிறுவனம் குறித்த தகவல்கள் ஒரு பக்கத்தில் வெளியிடப்படும். அதில் one of the directors என்ற முறையில் என்னைப் பற்றியும் கொஞ்சம் தகவல்கள் சேர்க்க வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் கேட்டுள்ள விபரங்களை அங்கே கொடுக்கின்றேன்.

அடுத்து, அறுசுவையால் பயன்பெறும் நாங்கள் அதற்கு என்ன பிரதி உபகாரம் செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு இருக்கின்றீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நல்ல உள்ளங்களை வார்த்தைகள்தான் அடையாளம் காட்டும். தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி. அறுசுவையில் இருக்கும் குறை நிறைகளை தெரிவித்து, இதன் வளர்ச்சியில் நீங்கள் பங்கு கொள்வதை மட்டும்தான் நான் தங்களிடம் இருந்து என்றும் எதிர்பார்க்கின்றேன்.

அறுசுவை குறித்து நான் பலவற்றை திட்டமிட்டுள்ளேன். ஏராளமானவற்றை நான் தனியொருவனாக செய்து வருவதால் நேரமின்மை காரணமாக நினைத்தவற்றையெல்லாம் செயல்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. சில விசயங்களில் எனக்கு மற்றவர்கள் உதவி நிறைய தேவைப்படுகின்றது. அம்மாதிரி விசயங்களை நான் அறுசுவை மன்றத்தில் தெரிவிக்கின்றேன். ஆர்வமும், நேரமும் உள்ள நேயர்கள் எனக்கு உதவலாம். மற்றபடி நீங்கள் அறுசுவையை தொடர்ந்து பார்வையிட்டு, அறுசுவை வளர்ச்சிக்கு உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கினால், அதுவே எனக்கு பெரிய பதில் உபகாரம்.

மீண்டும் எனது நன்றிகள்

anbudan

thank u for your reply admin.
all the best for u.
take care u and your team.

Vidyavasudevan.

anbudan

மேலும் சில பதிவுகள்