தேதி: March 30, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - 2 1/2 கப்
பொரிகடலை - 1 1/4 கப்
எள் அல்லது சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
உப்பு - தேவைகேற்ப
அரிசியை ஊறவைத்து உரலில் மாவாக அரைத்து ஈரப்பசை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பொரிகடலையை மிக்ஸியில் பொடித்து மாவாக்கி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும்.
உப்புத் தண்ணீர் தெளித்து, எள்ளு போட்டு நெய்யைக் காயவைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்த எண்ணெயில் முறுக்குப் பிழியவும்.
பிறகு இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.