பரங்கிக்காய் ராகி தோசை

தேதி: April 8, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பரங்கிக்காய் - 1 கப்,
ராகி மாவு - 2 கப்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
சின்ன வெங்காயம் - 5,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1 துண்டு,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லி - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பரங்கிக்காய் எல்லாவற்றையும் நைசாக அரைக்கவும்.
அரைத்ததை ராகி மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து சற்று கனமாக தோசையாக ஊற்றவும்.


சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம்
இப்போது (செவ்வாய் காலை) பரங்கிக்காய் ராகி தோசை செய்தேன். வித்தியாசமாக சுவையாக இருந்தது. நன்றி செல்வி மேடம்

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்பு ஆயிஸ்ரீ,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.