கோதுமை இனிப்பு புட்டு

தேதி: April 9, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை - 2 டம்ளர்,
சர்க்கரை - 1/2 டம்ளர்,
தேங்காய் - 1 மூடி,
முந்திரி - 4,
ஏலக்காய் - 5,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.


 

கோதுமையை பொன் வறுவலாக வறுத்து, ரவை போல் உடைத்து கொள்ளவும்.
உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, கோதுமை ரவையில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
கோதுமை ரவையை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுக்கவும்.
சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, முந்திரி, தேங்காய் துருவல், நெய், ஏலக்காயை பொடி செய்து, தூவி கலந்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்