ஹோட்டலில் தோசை மிகவும் முருகலாகவும், சிவந்த நிறமாகவும் வருகிருதே

ஹோட்டலில் தோசை மிகவும் முருகலாகவும், சிவந்த நிறமாகவும் வருகிருதே.. யாரேனும் அதன் ரகசியத்தியத்தை கூறுங்களேன்

ஹோட்டலில் எப்படி செய்வார்கள் என்று தெரியவில்லை.ஆனால் என் வீட்டில் இப்படி தான் செய்வேன்.3 கரண்டி மாவிற்க்கு 1 தேக்கரண்டி என்ற வீதம் மைதா மாவு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் தோசை மாவை கலக்கி ஊற்ற வேண்டும்.தோசை நல்ல முறுகலாகவும்,சிவந்த நிறமாகவும் வரும்.

அரிசி- 1கிலோ, நல்ல பொங்கும் உளுந்தாக இருந்தால் 200கிராம் போதும். சாத உளுந்தாக இருந்தால் 250 கிராம் வெந்தயம் 1/2 ஸ்பூன் போட்டு அரைக்கவும்.
அரிசி,வெந்தயம், உளுந்தை 2மணிநேரம் ஊறவைத்து பிறகு அரிசியை ரவை மாதிரி சிறுது தண்ணீர் ஊற்றி 20 முதல் 25நிமிடம் அரைக்கவும்
உளுந்தைய் 45நிமிடம் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
பிறகு இரண்டையும் உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
மறு நாள் தோசை மாவை பயன்படுத்த்வும்.
தோசைய் கல் காய்ந்த பின்பு தோசை மாவை கல் முழுவதும் ஊற்றி சுற்றி வரை நெய்/ எண்ணெய் ஊற்றி அதிக தணலில் வைக்கவும். சுற்றிவரை முறுகிய பிறகு குறைந்த தணலில் வைக்கவும்.
தோசை கல்லை விட்டு தோசை பிரிந்து வரும் போது தோசையினை மடக்கி எடுக்கவும்.ஹோட்டல் தோசை தயார்

faizakader

டியர் நந்து,
உளுந்துடன், 1 தேக்கரண்டி வெந்தயம், 1 கைப்பிடி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து, அரைத்து தோசை ஊற்றினால், தோசை முருகலாகவும், சிவந்தும் வரும். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

உங்கள் பதில்களுக்கு மிக்க நண்றி

Anbudan Nandhu

Anbudan Nandhu

அரிசி 4டம்லர்
உளுந்து 1டம்லர்
வெந்தயம் 1ஸ்பூண்
க.பருப்பு 1கைபிடி
(புழுங்கல் (3)+பச்சை (1) கலந்தும் போடலாம் )
தோசை தீஞ்சு போகாது நல்லா மொருமொருனு இருக்கும்

dont cry because its over smile because it happened

kadaigalil virkum masala sundal yarukkavathu theriyma?ean baby vendum endru adam pidikiran.adikadi kadaigalil vangi kodukka mudiyathu.veetileye prepare seiyalam endru ninaikiren...therinthavargal sollavum please................
.

kadaigalil virkum masala sundal yarukkavathu theriyma?ean baby vendum endru adam pidikiran.adikadi kadaigalil vangi kodukka mudiyathu.veetileye prepare seiyalam endru ninaikiren...therinthavargal sollavum please................
.

வேக வைத்த கொண்டை கடலை ஒரு கப்

கடாயில் தாளிக்க எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து துருவிய இஞ்சி அரை கரண்டி , துருவிய தேங்காய் , மாங்காய் , கேரட் தலா 2 கரண்டிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அத்துடன் கடலையை சேர்த்து , பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.

மேலும் சில பதிவுகள்