சில்லி சிக்கன் சாண்ட்விச்

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. ஹவ்வா அலியார் அவர்களின் எளியமுறை தயாரிப்பான இந்த சிக்கன் சாண்ட்விச் மிகவும் சுவையானது. அதோடு ஆரோக்கியமானது. சத்தானது. செய்வதற்கும் எளிமையானது. திருமதி. ஹவ்வா அலியார் அறுசுவை நேயர்களுக்காக கூட்டாஞ்சோறு பகுதியில் ஏராளமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.

 

சாண்ட்விச் பிரெட் - 4 துண்டங்கள்
லெட்டூஸ் - சிறிது
தக்காளி - 3
வெள்ளரிக்காய் - 1
புதினா சட்னி - 5 தேக்கரண்டி
தக்காளி சட்னி - 4 தேக்கரண்டி
சிக்கன் - 150 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தயிர் - அரைத் தேக்கரண்டி


 

தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து அரைதேக்கரண்டி எடுத்து வைக்கவும்.
தக்காளி, வெள்ளரியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். லெட்டூஸ் இலைகளை கழுவி வைக்கவும்.
சிக்கன் துண்டங்களுடன் உப்பு, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, அரைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி சுமார் 2 மணி நேரம் ஊற விடவும்.
ஊறிய பின்னர் எடுத்து க்ரிலில் வைத்து கருகவிடாமல் வேக வைத்து எடுக்கவும். கிரில் இல்லை என்றால் தோசைக்கல் மேல் வைத்து சுடவும்.
வெந்த சிக்கனை எடுத்து, சிறிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
இப்போது ப்ரெட்டின் மேல் பட்டர் தடவி டோஸ்ட் பண்ணவும்.
நறுக்கின தக்காளி, வெள்ளரிக்காய், லட்டுஸ் ஆகியவற்றை ஒரு ப்ரெட்டின் மீது வைத்து புதினா சட்னி, தக்காளி சட்னி ஆகியவற்றை மேலே தடவவும். பின்னர் சிறியதாக நறுக்கிய சிக்கனை உள்ளே வைத்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் ஹவ்வா மேடம்!
நலமா? அறுசுவையின் பக்கம் வரும் நேரம் ரொம்ப குறைந்துக்கொண்டு வருவதால், இப்போதுதான் உங்களின் இந்த ரெசிப்பியை பார்த்தேன். அருமை! என்ன பர்கர் பன்னைதானே சாண்ட்விட்ச் பிரெட் என்கிறீர்கள்? முடியும்போது கூறவும்! முதல் படத்தில் தேவையான பொருட்கள் வைத்திருக்கும் ப்ளேட் அதிகமான டிசைன் இல்லாததாக இருந்தால் பொருட்கள் இன்னும் தெளிவாக தெரியும் என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி!

டியர் அஸ்மா மேடம்!
நலமா? பர்கர் பன் வேறு சாண்ட்விட்ச் பிரெட் என்பது வேறு ஆனால் நீங்கள் பர்கர் பன்னையும் உபயோகப்படுத்தலாம்
அடுத்தமுறை ப்ளேட் அதிகமான டிசைன் இல்லாததாக பார்த்துக்கொள்கிறேன் உங்கள் கருத்து மிக்க நன்றி!

can u please tell me wat lettuce means n tamil?