SARVAJITH PUTTAANDU VAALTTHUKKAL

VANAKKAM MADAM.. PUTTAANDU VAALTTHUKKAL..

PUTTAANDU ANDRU KADAVULUKKU MUKKIYAMAANAH PRASAATHAM ETHU PADAIKKA VENDUM?

NANDRI..

INDRA.

ஹாய் இந்திரா,
உங்களுக்கும் மற்ற அனைத்து சகோதரிகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு முதல் நாளிரவு எல்லா வகை பழங்களையும் மற்றும் ஒரு தேங்காயை சரிபாதியாக உடைத்து, ஒரு மூடியில் காசும், மற்றொரு மூடியில் தங்க நகையையும் வைத்து, அவையாவும் கண்ணாடியில் தெரிவது போல் ஒரு பெரிய தட்டில் வைத்து கடவுளுக்கு முன்பாக வைப்பார்கள். காலையில் எழுந்தவுடன் வீட்டிலுள்ள யாவரும் முதன்முதலாக அதன் முன் கண்விழிப்பர். பிறகு அந்த பழங்களை எடுத்து பாயசம் வைப்பார்கள். சர்க்கரைப்பொங்கல், வடை செய்து, இந்த பாயசமும் சேர்த்து கடவுளுக்கு நைவேத்தியம் செய்வார்கள். இதனுடன் வேப்பம்பூ பச்சடி சேர்த்துக் கொள்வார்கள். கீழ்க்கண்ட லின்க்ஸை தொடுக்கவும்.
<a href="http://www.arusuvai.com/tamil/node/3682" target="_blank">http://www.arusuvai.com/tamil/node/3682</a>
<a href="http://www.arusuvai.com/tamil/node/3645" target="_blank">http://www.arusuvai.com/tamil/node/3645</a>

சர்க்கரைப்பொங்கல், வேப்பம்பூ பச்சடி இன்றைய புதுசு கலா புதுசில் பார்க்கவும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

MIGAVUM NANDRI MADAM..

மேலும் சில பதிவுகள்