வெண்பொங்கல் சமையல் குறிப்பு - 3944 | அறுசுவை


வெண்பொங்கல்

food image
வழங்கியவர் : இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
தேதி : புதன், 11/04/2007 - 16:52
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.

 

 • பச்சரிசி - 2 டம்ளர்,
 • பாசிப்பருப்பு - 3/4 டம்ளர்,
 • பால் - 1 டம்ளர்,
 • சீரகம் - 2 தேக்கரண்டி,
 • மிளகு - 2 தேக்கரண்டி,
 • முந்திரி - 10,
 • இஞ்சி - சிறிது,
 • கறிவேப்பிலை - சிறிது,
 • உப்பு - தேவையான அளவு,
 • நெய் - 1/4 டம்ளர்.

 

 • பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
 • அரிசியை பாசிப்பருப்புடன் போட்டு, பாலுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
 • உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
 • 1 ஸ்பூன் நெய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து, மீதி நெய்யோடு சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.


வெண்பொங்கல்

எனக்கும் வெண்பொங்கலுக்கும் ஆகவே ஆகாது செல்வி மேடம்... எப்பவுமே பேஸ்ட் மாதிரிதான் வருது :-(

ஆனா என்னவருக்கு வெண்பொங்கல்னா அவ்ளோ இஷ்டம்... நானும் கல்யாணம் ஆனதில இருந்து கடந்த 2 வருஷமா முயற்சி பண்ணிட்டேன்..நோ லக்..

வெறுத்து போய் வீட்டுல செய்யறதே இல்ல... ஹோட்டல் போனா சாப்பிடறதோட சரி.

நாளைக்கு காலையில உங்க குறிப்பு செய்து பார்க்கபோறேன் :-) [நமக்கென்ன கஜினி முகம்மது மாதிரி படையெடுக்க வேண்டியதுதான்.. கஷ்டப்படறது ஆத்துக்காரர்தான :-) ] .. இதுனால ஒரெ நன்மை என்னன்னா நான் வெண்பொங்கல் செய்யற அன்னைக்கு என்னவர் காலையில வெண்பொங்கல் சாப்பிட்டா நைட் வரைக்கும் பசியே இல்லன்னு சொல்றாரு :-)) [ஸ்மைலி போட்டாலும் நிஜமாவே கஷ்டமா இருக்கு அவருக்கு பிடிச்ச டிஷ் செய்ய வரலைன்னு...]

இவருக்கு மட்டும் இல்ல... என் தங்கைக்கும் அப்படித்தான்.. தீபாவளிக்கு செஞ்சேன்... காலையில சாப்பிட்டவதான்... அதுக்கப்பறம் பசிக்கல பசிக்கலன்றா..அப்புறம் சோடா, லெமன் ஜுஸ்னு என்னென்னமோ ட்ரை பண்ணினா பசிக்கறதுக்காக :-(

ஊருக்கு போறப்ப மெனக்கெட்டு இதுக்கு குறிப்பு வேற வாங்கிட்டு போறா !! :-(

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா பொங்கல்

எனக்கு ரொம்ப சிரிப்பு வந்துட்டு. பொங்கல் பாசுமதி ரைஸில் ட்ரைபண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். செல்விமா சொல்றமாதிரி 4 விசில் மேல விடாதீங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் சங்கீதா

நீங்க ரொம்ப டால்டாவோ அல்லது நெய்யோ அதிகமா யூஸ் பண்ணியிருப்பீங்க அதனால் கூட அப்படி(பசியெடுக்காம)இருந்திருக்கலாம்.குறைச்சு யூஸ் பண்ணி பாருங்க.

பேஸ்ட் மாதிரி வருதுன்னா,தண்ணி அளவு 1:3,அரிசி(1கப்):தண்ணீர்(3 கப்).இந்தளவு பண்ணிபாருங்க.

என்னுடைய வெண்பொங்கல்

தனிஷா,
உங்க பதிலுக்கு நன்றி. எல்லா ப்ராண்ட் பாஸ்மதி அரிசிலயும் பொங்கல் நல்லா வருமா ?

சுகன்யா,

அங்கதான் பிரச்சனையே. குறிப்பெல்லாம் ஒழுங்காதான் பார்த்துட்டு போவேன்..ஆனா செய்யறப்போ கொஞ்சம் தண்ணி அதிகம் விட்டா இன்னம் நல்லா வருமோ, நெய் அதிகம் விட்டா நல்லா வருமோன்னு ஆர்வக்கோளாறுல சேர்த்துடுவேன்..அதான் பிரச்சனை... :-(

இன்னைக்கு காலையில செல்வி மேம் குறிப்புபடி பொங்கல் செஞ்சேன்.. நோ எக்ஸ்ட்ரா நெய்,எக்ஸ்ட்ரா தண்ணி.. ஆனா குளிச்சுட்டு வந்து மிளகு சீரகம் தாளிக்கலாம்னு வந்தா நல்லா பொங்கல் ஆறிபோச்சு..அதுக்கப்புறம் மேடம் சொல்லயிருக்கற மாதிரி தண்ணியில உப்பு சேர்த்து அடுப்ப சிம்ல வச்சு கிளறுனேன்..சாதம் குழைவா இல்லன்னு கொஞ்சம் தான் கொஞ்சம்தாங்க [எப்பவும் போல ஆர்வக்கோளாறுல] காய்ச்சுன பால சேர்த்தேன்... அதோட சுவையே மாறி போச்சு :-( கணவருக்கு பிடிக்கலையாம்...ஆனா தேங்காய் சட்னியோட சாப்பிட நல்லா இருக்குன்னு சொன்னங்க ...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

வெண்பொங்கல்...

அன்பு சங்கீதா,
நலமா? வெண்பொங்கல் கதையை கேட்டா சிரிப்பு தான் வருது.
நான் கொடுத்துள்ள அளவு சரியாக தண்ணீர் விட்டால் பேஸ்ட் போல வராது. எடுத்து தாளிக்க, உப்பு சேர்க்க கஷ்டமாக இருந்தால் முதலிலேயே எல்லாம் சேர்த்து இன்னும் ஒரு விசில் விட்டு எடுத்தால் சரியாக இருக்கும். நான் கொடுத்த அளவுக்கு மேல் நெய் சேர்த்தால் திகட்டும். டால்டா கூடவே கூடாது. ஓகே, இந்த தடவை சூப்பரா வரப்போகுது, பாரேன்.
கம்மங்கொழுக்கட்டை பதிவு படித்தேன். எல்லா கம்பிலும் ததல் இருக்கும். முதலில் மிக்ஸியில் 2 நிமிடம் ஓடவிட்டு பிறகு புடைத்து, செய்ய வேண்டும். செய்வது ரொம்ப எளிதே. எந்த ஊர் நீ? கம்பு கரைத்து குடிப்பது தெரிந்திருக்கிறதே! சின்ன வெங்காயம் பொடியாக ந்றுக்கி, தூவி குடிக்க இன்னும் சூப்பர். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி செல்வி மேம்

நான் நலம். உங்கள் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

இந்த தடவை செஞ்சப்ப பேஸ்ட் மாதிரி வரலை..அப்பவே முடிவு பண்ணிட்டேன் இன்னொரு முறை முயற்சி பண்ணனும்னு.

நான் தற்போது பெங்களூரில் இருக்கிறேன்...அப்பா பிறந்த ஊர் கரூர் பக்கத்தில கிராமம்..அங்க ஊருக்கு போறப்ப கம்மங்கூழ் குடிப்போம்..அதெல்லாம் பாட்டி தாத்தா இருந்த வரைக்கும்தான்...

அம்மா அப்பப்ப செஞ்சு தருவாங்க...சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி தூவி தான் குடிப்போம் :-) அத அடிச்சுக்க வேற டிஷ் கிடையாது...முத 3 மாசமும் சாப்பாடு வாசம் வந்தாலே வாந்தி வந்துச்சு... அம்மா செஞ்சு குடுத்த கம்மங்கூழ் தான் குடிச்சேன் அமிர்தமா இருந்துச்சு...

என் கணவர் கம்புல செய்யற ஐடம்-னாலே சாப்பிடறதில்ல...இந்த தடவை கம்மங்கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட வைக்கணும். :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

செல்வி மா

உங்க குறிப்பெல்லாம் செஞ்சது போன வாரம்..ஆனா பின்னூட்டம் இப்பதான் போட முடிஞ்சது..

இந்தமுறை வெண்பொங்கல் நல்லா பண்ணிட்டேன்..இனிமே இன்னம் சூப்பரா பண்ணிடுவேன்னு நினைக்கிறேன் :-)

அப்புறம் உங்க உளுந்த வடை சூப்பரோ சூப்பர்... அம்மாவே என்னை விட நல்லா பண்ணியிருக்கடீன்னாங்கன்னா பார்த்துக்குங்க ...

வடை மோர் குழம்புதான் கொஞ்சம் சொதப்பிட்டேன்னு நினைக்கிறேன்... துவரம்பருப்பு அதிகமா போட்டுட்டேன் :-(

காலிஃப்ளவர் மிளகு வறுவலும் சொதப்பிட்டேன் போல... வெறும் காலிஃப்ளவர வேக வைச்சு உப்பு போட்ட மாதிரி இருந்தது... அப்படிதான் இருக்குமா? இல்ல நான் ஏதானும் மிஸ் பண்ணிட்டனான்னு தெரியல :-(

மொத்தமா போட்டனால எல்லா பின்னூட்டத்தையும் இங்கயே போடறேன்.... மன்னிச்சுக்கோங்க

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு

அன்பு சங்கீதா,
வளைகாப்பு நல்லபடியா முடிஞ்சுதா?? கை நிறைய வளையலோடு பார்க்க ஆசையா இருக்கு. கையை ஆட்டு, பார்க்கலாம். சத்தம் நல்லா இருக்கு.

அதனால என்ன, மெல்ல பின்னூட்டம் கொடு. என்ன அவசரம்.
முயற்சியும், ஆர்வமும் இருந்தா போதும். ஒருமுறை சொதப்பினாலும் அடுத்த முறை சரியாக வரும்.
துவரம் பருப்பு அதிகமானா ரொம்ப திக்காயிடும். வடை அவ்வளவா ஊறாது.
இல்லப்பா.நீ செய்ததில் காரம் போதலைன்னு நினைக்கிறேன். மோர்க்குழம்புக்கு நல்ல காம்பினேஷனா இருக்கும்.
கரூர் பக்கமா? கரூரில் நாலு வருடம் இருந்திருக்கேன். சொந்த ஊரே அந்த பக்கம் தானே! எல்லா ஊரும் எனக்கு தெரியும். எந்த ஊருன்னு தெரிஞ்சிக்கலாமா? நீ இப்ப எங்க இருக்கே? கம்பு என் பையனுக்கும் ரொம்ப பிடிக்கும். வெயில் காலம் வந்தா செய்திடுவேன்.
உடம்பை பார்த்துக்கோ.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்விமா,

வளைகாப்பு நல்லபடியா முடிஞ்சது... :-) வளையல் சத்தம் கேக்குதா?
உங்களுக்கும் கரூர் பக்கம்தான் சொந்த ஊரா... எங்க அம்மா அப்பா 2 பேருக்குமே கரூர் பக்கம்தான் சொந்த ஊர். நாங்க இருக்கறது கரூர்ல பசுபதிபாளையம்...

இப்ப நான் இருக்கறது பெங்களூர்ல...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

voww... வெண் பொங்கல்

நான் செய்யும் வெண்பொங்கல் என்னவருக்கு மிகவும் இஷ்டம். வாரத்தில் ஒரு முறையாவது செய்துவிட வேண்டும். ஆனால் நேற்று உஙகள் முறை செய்தேன். அருமையோ அருமை. மிகவும் நன்றி.