சர்க்கரை பொங்கல்

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 டம்ளர்,
பாசிப்பருப்பு - 3/4 டம்ளர்,
வெல்லம் - 1/2 கிலோ,
பால் - 1 டம்ளர்,
தேங்காய் துருவல் - 1 மூடி,
ஏலக்காய் - 3,
முந்திரி - 10,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 1/4 டம்ளர்.


 

பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
அரிசியை பாசிப்பருப்புடன் போட்டு, பாலுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெல்லத்தைத் தூள் செய்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
தேங்காயை சிவக்க வறுக்கவும்.
வறுத்த தேங்காய், ஏலக்காய்தூள், உப்பு சேர்க்கவும்.
1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து, மீதி நெய்யோடு கொதிக்கும் சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

thanku for this recipie