தேவையானப் பொருட்கள்
- வடைக்கு:-
- உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்,
- பச்சரிசி - 1 தேக்கரண்டி,
- ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
- சின்ன வெங்காயம் - 10,
- காய்ந்த மிளகாய் - 3,
- பச்சை மிளகாய் - 3,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- பூண்டு - 3 பல்,
- இஞ்சி - சிறிது,
- பெருங்காயம் - சிறிது,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி தழை - சிறிது,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - பொரிக்க.
- தயிருக்கு:-
- தயிர் - 1/2 லிட்டர்,
- பால் - 1/4 லிட்டர்,
- சர்க்கரை - 1 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி,
- சீரகம் - 1/2 தேக்கரண்டி,
- இஞ்சி - 1 துண்டு,
- பச்சை மிளகாய் - 2,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- வடை செய்ய:-
- உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- தயிருக்கு:
- தேங்காய் துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- தயிரை கட்டியின்றி கலக்கவும்.
- அரைத்த விழுது, உப்பு, பால், சர்க்கரை சேர்த்து தயிருடன் கலக்கவும்.
- பொரித்த வடைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து தயிரில் ஊற வைக்கவும்.
|
குறிப்பு:
கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, காராபூந்தி, சிறிது தனியா தூள் மேலே தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
25 வடைகள் வரும். |
30 நிமிடங்கள். |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 31 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 50 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -