மீன் மிளகு ஆணம்

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 1/4 கிலோ(பொடி மீன்)
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும் தாளிப்புக்கு சிறிது எடுத்துவைக்கவும்.
வெந்தயம் - சிறிது
மஞ்சள் தூள் -சிறிது
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
கத்தரிக்காய் - 1


 

முதலில் மீனை கழுவி அதில் வெங்காயம்,இரண்டாக கீறிய பச்சைமிளகாய், வெந்தயம், உப்பு,மஞ்சள் தூள் போட்டு கலந்துவைக்கவும்.

பின் சோம்பு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு இவற்றை வெறும் சட்டியில் போட்டு வறுத்து பொடி செய்துவைக்கவும்.

பின் தேங்காய் பாலில் அரைத்த மசாலாவை போட்டுகரைத்து வைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் தேங்காய் மசாலா கலவையை போட்டு கலக்கி விடவும் நன்கு கொதிக்கவிடவும் கொதித்து வந்ததும் மீன் கலவையை போட்டு கிளறி, நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு வேகவிடவும்.


கத்தரிக்காய் எத்தனை போடுகிறோமோ அதற்க்கு தகுந்தது போல் மிளகு சேர்த்துக்கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்