பேக்ட் பொட்டேடோஸ்

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு: 8நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரஸ்ஸட் என்ற வகை உருளைக்கிழங்கு - நான்கு
நறுக்கிய வெங்காயத்தாள் - இரண்டு மேசைக்கரண்டி
வெண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
புளித்த க்ரீம் - அரைக்கோப்பை
பால் - கால் கோப்பை
துருவிய பார்மஜியானோ சீஸ் - இரண்டு மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை தோலை சீவாமல் நன்கு கழுவி ஈரம் போக துடைத்து வைக்கவும்.
அதை 350 டிகிரி Fன் வெப்பத்திற்கு சூடுப்படுத்திய அவனில் வைத்து வேகவிடவும். அவனின் நடுவிலுள்ள ரேக்கில் நேரிடையாக வைத்தால் போதும்.
இவை நன்கு வேகுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும்.
பிறகு வெளியில் எடுத்து நன்கு ஆறவைக்கவும். கை சூடு பொருக்கும் அளவிற்கு எடுத்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி அதனுள்ளிருக்கும் சதைப்பற்றை நடுவில் மட்டும் நன்கு சுழற்றி எடுத்து வைக்கவும்.
பிறகு ஒரு சிறிய கோப்பையில் வெண்ணெயையும், புளித்த க்ரீமையும் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து பாலையும் சேர்த்து அதனுடன் வெங்காயத்தாள் மற்றும் உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ் ஆகியவற்றை போட்டு தனியாக எடுத்து வைத்துள்ள கிழங்கையும் சேர்த்து ஒன்றாக கலக்கி வைக்கவும்.
பிறகு கலக்கிய கிழங்கு கலவையை மீண்டும் தோலுடன் கூடிய கிழங்கின் ஓட்டினுள் வைத்து ஸ்டஃப் செய்து பேக்கிங் தட்டில் வரிசையாக வைக்கவும்.
தொடர்ந்து அதன் மீது சிறிது வெண்ணெயை கிள்ளி போட்டு 400 டிகிரி F ல் சுடாக்கிய அவனில் வைத்து மேற்புறம் சிறிது சிவப்பாகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்