முடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.
பெண்கள் முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனை.எல்லோருக்கும் வெளிநாட்டில் முடி கொட்டுகிறது என்பார்கள்.
நான் படிக்கும் போதும் என் பிரண்ட்ஸ் புலம்புவார்கள்.சிலருக்கு முக்கியமாக பாராஷூட் ஒத்துக்கொள்ளாது.ஆனாலும் அதைப்பற்றி தெரியாமல் நான் சுத்தமான எண்ணெய்தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் கொட்டுகிறது என்பார்கள்.
முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல.VVD தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது.இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய்.அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.செய்முறையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம்.எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கால்களில் ஊடுருவி உள்ளே செல்லும்.அதனால் தான் சில எண்ணெய்களை,கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.
என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப்பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.
இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங்கள்.அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள்.வாழைப்பழம்,தயிர்,கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம்.தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது,தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது,சுடு தண்ணீரில் குளிப்பது,அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத்துவது(புதிதாக ஹெல்மேட் வேறு),தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய்த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்குவது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள்.Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள்.தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.

இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.

முடி கொட்டுபவர்களுக்கு
தினமும் சிறிது கறிவெபில்லை சாப்பிட்டால் முடி உதிர்வது
குறையும் .ரெகுலர் என்னன தெய்த்து ,ஒஇல் குளீத்தல் நல்ல பலன் கிடைத்துள்ளது

Hair fall may even be due to excessive body heat so taking fenugreek(வெந்தயம்) either externally or internally will do
saranyamohan

saranyamohan

சகோதரி சரண்யா அவர்களுக்கு,

பயனீட்டாளர் பெயரையே தமிழில் பதிவு செய்துள்ள தாங்கள் தமிழில் பதில் கொடுக்கலாமே. தமிழ் டைப் செய்ய தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பதில் கொடுப்பதையே கூடாது என்று சொல்லி வருகின்றோம். தயைகூர்ந்து தமிழில் பதில் கொடுங்கள்.

என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.
கருவேப்பிலை துவையல் செய்து தினமும் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்
முடி கொட்டுவது நின்று வளற ஆரம்பிக்கும்.
ஷாம்பூவை தவிர்த்து, சீயக்காய் மட்டுமே தலைக்கு தேய்க்கவும்.
முதல் நாள் அரை கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மிக்சியில் அரைத்து,
சீயக்காயுடன் சேர்த்து குளிக்கவும். வெந்தயம் பொடுகுக்கும் மருந்தாக அமையும்.
முடிந்தவர்கள் சீயக்காயை கடையில் வாங்கி, சில பொருட்களுடன் சேர்த்து மிஷினில்
கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு முறை செய்தால் 3 மாதங்களுக்கு வரும்.
சீயக்காய் அரைப்பது பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.

சீயக்காய் - 1/2 கிலோ
பச்சைப்பயறு - 200 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
காய வைத்த கறிவேப்பிலை -
காய வைத்த பன்னீர் ரோஜா இதழ்கள்
காய வைத்த செம்பருத்தி இலைகள், பூக்கள்
காய வைத்த கருந்துளசி இதழ்கள் - ஒரு கைப்பிடி
காய வைத்த வேப்பிலை இதழ்கள் - ஒரு கைப்பிடி
சீயக்காயை வெய்யிலில் காய வைக்கவும். எல்லாவற்றையும் சீயக்காய் அரைக்க என்று தனியாக இருக்கும் மிஷினில் அரைத்து சிறிது நேரம் நிழலில் உண்ர்த்தி காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சாதம் வடித்த கஞ்சியில் இந்த சீயக்காய்ப் பொடியைக்கலந்து தேய்த்துக்கொண்டால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
அன்புடன்
ஜெயந்தி

உடனடியாக பதில் தந்துவிட்டீர்கள்

கருவேப்பிலை துவையல் குறிப்பு தர முடியுமா please

வர்ஷினி,
கறிவேப்பிலை துவையல் - www.arusvai.com/tamil/node/5563
கறிவேப்பிலை பொடி - www.arusuvai.com/tamil/node/3_27

துவையலை விடபொடியாகப் பொடித்து வைத்துக் கொண்டால் அதிகா நாள் வைத்துக் கொள்ளலாம். தினமும் முதலில் ஒரு வாய் சூடான சாதத்தில் பொடியைப்போட்டு சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் போட்டு சாப்பிடவும்.
அன்புடன்
ஜெயந்தி

குறிப்புக்கு மிக்க நன்றி ,உங்களுக்கு எத்தனை அடி கூந்தல் அக்கா?

வர்ஷினி இப்ப கதை இதுதான். சவுரி வெக்கறதா, விக் வெக்கறதான்னு யோசிச்சுட்டிருக்கேன். யாம் பெறாத இன்பம் பெறுக இவ்வையகம். அதனாலதான் உங்களுக்கு குறிப்பு தரேன். என் பெண்ணுக்கு நல்ல அழகான கூந்தல். ஒரு முடி உதிர்ந்தா கூட ரொம்ப புலம்புவா.
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்