பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

தேதி: April 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பொன்னாங்கண்ணி கீரை - 2 கப் ( ஆய்ந்தது)
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 5
தனியா - அரை மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
பால் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

கீரையோடு மஞ்சள் தூள், பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, சீரகம் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் நைசாக பொடிக்கவும்.
குக்கரை திறந்து கீரையை லேசாக மசித்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
பின் உப்பு, தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கெட்டியான பின் பால் சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்