தஹி சிக்கன்

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 5 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/2கிலோ
இஞ்சிபூண்டு விழுது- 2ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2ஸ்பூன்
மஞ்சள் கேசரிகலர்- கொஞ்சம்
கரம்மசாலா- 1ஸ்பூன்
எலுமிச்சைசாறு- 1ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தயிர்- 1கப்
சிகப்பு கேசரி கலர்- கொஞ்சம்
உப்பு- தேவைக்கு
நீண்டமாக அரிந்த வெங்காயம்- 1
ப.மிளகாய்- 1
கொ.மல்லி- தேவைக்கு
எண்ணெய் - பொறிக்க


 

சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் கேசரிகலர், கரம்மசாலா,எலுமிச்சைசாறு
உப்பு போட்டு விரவி 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து சிக்கனை பொறித்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர்ருடன் சிகப்பு கலர், உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதனுடன் பொறித்த சிக்கனை கலந்து
1/2மணி நேரன் ஊறவைக்கவும்.
பிறகு தோசை கல் வைத்து 3ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு வெங்காயம், பமிளகாய், போட்டு பொன்னிறமாக
வதக்கவும், தயிருடன் ஊறிய சிக்கனை போட்டு வதக்கவும். தயிர் நன்றாக சிக்கனுடன் கலந்த பின்பு கொ.மல்லி தூவி
இறக்கி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்