முட்டை குழி பணியாரம்

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா- 1/2 கிலோ,
ரவை - 1/4 கிலோ,
முட்டை - 5,
சர்க்கரை - 1/4 கிலோ,
ஏலக்காய் - 5,
முந்திரி - 10,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - சுடுவதற்கு.


 

ரவை, மைதாவை கலந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஏலக்காயை பொடி செய்யவும். முட்டையை உடைத்து அடித்து வைக்கவும்.
ஊற வைத்த மாவுடன் ஏலக்காய், சர்க்கரை, உப்பு, முட்டை சேர்த்து கலக்கவும்.
முந்திரியை சிறு துண்டுகளாக உடைத்து, சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குழி பணியாரக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை பாதி குழிக்கு ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்