தக்காளி குருமா - 2

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தக்காளி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது,
பச்சை மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
தேங்காய், 3 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். குருமா கெட்டியானதும் இறக்கவும்.


இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க தக்காளி குருமா இட்லிக்கு சூப்பர்...

முதல்லாம் ஹாஸ்டல் ல இருந்து வீட்டுக்கு போறப்ப நான் வரேன்னாலே அம்மா இட்லிக்கு அரைச்சுருவாங்க.... எத்தனை இட்லி உள்ள போகுதுன்னே தெரியாது.அது பாட்டுக்கு நான் ஸ்டாப் பா போகும் :-) ரொமப நாள் கழிச்சு அது மாதிரி சாப்பிட்டேன்....

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
உனக்கு நீயே கண் வெச்சுக்காதே :-)
நல்லா சாப்பிடு. பக்கத்தில இருந்தா செய்தே கொடுத்திருப்பேன், ஏதோ என்னால முடிஞ்சது குறிப்பாவது கொடுக்க முடிஞ்சுதே.பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இப்படில்லாம் பொசுக்குன்னு சொல்லிடாதீங்க... உங்க சாப்பாட்ட சாப்பிடறதுக்காகவே ஒரு தடவை பாண்டிக்கு விசிட் அடிப்பேன் ஆத்துக்காரரோட... :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.