ஸ்ட்ஃப்டு கத்தரிக்காய்

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ,
காய்ந்த மிளகாய் - 10,
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
தனியா - 2 மேசைக்கரண்டி,
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1/4 கப்.


 

கத்தரிக்காயை நான்காக பிளந்து (காம்பு பக்கம் வெட்டக் கூடாது) தண்ணீரில் போட்டு வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா, பொட்டுக்கடலை, பெருங்காயம் சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.
கத்தரிக்காயை தண்ணீரை வடித்து விட்டு, பொடித்த பொடியை கத்தரிக்காய் உடையாமல் திணித்து வைக்கவும். (மீதி பொடியை தனியே வைக்கவும்.)
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் திணித்த கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 1/2 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து அவ்வப்போது தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் மீதி பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்