காரட் ஹல்வா

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 2 அல்லது 3
பால் - அரை லிட்டர்
நெய் - 5 தேக்கரண்டி
சர்க்கரை - 200 கிராம்
பாதாம் - 5 வில்லை
முந்திரி - 10
ஏலக்காய் பொடி - சிறிது
ஏலம் - 3 (பொடித்தது)


 

காரட்டை சீவி, அலசி விட்டு துருவிக் கொள்ளவும்.
ஒரு கடாயில், சிறிது தண்ணீர் ஊற்றி காரட் போட்டு வேக விடவும்.
பாலை தனியே சுண்ட காய்ச்சி, காரட் வெந்ததும், சுண்டிய பாலை ஊற்றவும். சர்க்கரை சேர்த்து நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். ஏலப்பொடி தூவவும்.
ஹல்வா போல இறுகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரியையும், பாதாமையும் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தியா
நான்கு நாட்கள் முன்பே உங்க கேரட் ஹல்வாவை செய்து
பார்த்தேன். டேஸ்ட் சூப்பர். கேரட் ஹல்வா செய்தது இதுவே
முதல்முறை. சர்க்கரை மட்டும் கண், கை அளவு வைத்துக்
கொண்டேன்.நன்றி!