தக்காளி குழம்பு

தேதி: April 14, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

தக்காளி - 4
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 2 பல்
தேங்காய் - 1/2 மூடி
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் - 2
சோம்பு - 1/4 ஸ்பூன்


 

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பிறகு பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து வாசம் போக வறுத்து எடுக்கவும்.
ஆறியதும் பூண்டு நறுக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதங்கியதும் அரைத்த தக்காளி, மசாலா, உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் கொத்தமல்லி போட்டு பரிமாறவும்.
இது இட்லி மற்றும் தோசைக்கு ஏற்றது.


மேலும் சில குறிப்புகள்


Comments

என் அம்மா செய்வது போல் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி

என் அம்மா செய்வது போல் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி

சாந்தி இன்னைக்கு உங்க தக்காளி குழம்பு வைத்தேன். தோசைக்கு நல்லா இருந்தது,பொட்டுகடலையும் தேங்காயும் வறுத்து அரைத்ததில் குழம்பு வித்தியாசமான டேஸ்டா இருந்தது நன்றி.

உங்க குறிப்பில் இருந்து ரவா தோசை செலக்ட் பண்ணிட்டு அதற்கு ஒரு வித்தியாசமான காம்பினேஷன் தேடினேன். தக்காளி குழம்பு ஈஸியா இருந்தது. செய்தேன் சூப்பரா இருந்தது. நன்றி!

இன்று காலை இட்லிக்கு உங்களின் தக்காளி குழம்பு தான்.. என் அம்மாயி(அம்மாவின் அம்மா)கொஞ்சமே கொஞ்சம் தனியாவும்,சீரக மிளகும் சேர்த்து எல்லவற்றையும் வறுத்து பின் அரைத்து இப்படித்தான் செய்வார்கள்.. ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் அனைத்தையும் அப்படியே பச்சையாகவே அரைத்து செய்வோம்.. அதுவும் சுவையாகவே இருக்கும்.. வறுக்கும் நேரமும் மிச்சம் ;)