புழுங்கல் அரிசி சீடை

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

அரிசியில் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
உளுத்தம் பருப்பை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வெண்ணெய் பதம் வரும் வரை கட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் உளுத்தமாவு, தேங்காய்ப்பூ, எள் சேர்த்து பிசைந்து சீடைகளாக உருட்டி சிறிது நேரம் காற்றில் உலர்த்திக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்