தளத்தின் புதிய அறிமுக பக்கம்

திரு அட்மின் அவர்களுக்கு பதில் எழுதியதற்க்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியுள்ள படி பதிவேட்டில் மேற்க்கொண்டு தொடராமல், நாம் கலந்துரையாடிய விசயத்தின் தொடர்ச்சிய்யை மன்றத்தில் தொடருகின்றேன்.

"இல்லாதவரும்" (இங்கே "வரும்" என்பதை கவனத்தில் கொள்ளவும்.)என்ற வார்த்தைக்கு தாங்கள் கூறியுள்ள விளக்கம் அர்த்தமாகவும், தலைபிற்க்கு பொருத்தமாகவும் உள்ளது, சந்தேகமே இல்லை. ஆனால் நான் கூற வந்த விசயத்தின் அர்த்தத்தை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்தி விடுகின்றேன். அதாவது அறுசுவையின் புதிய, அறிமுக பக்கத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள யாரும் சமைக்கலாம் என்ற தலைப்பு, இரண்டாவதாக இடம் பெற்றிருந்தாலோ அல்லது இப்போதுள்ள இடத்திலிறுந்து அதற்க்கு கீழாக இடம் பெற்றிருந்தாலோ, நான் இதை குறிப்பிட்டிருக்க மாட்டேன். முதல் பத்தியின் முதல் வரிகள் என்ற முறையில் தான் எழுதினேன். முதல் என்று தொடங்கும் எதுவுமே மங்கலகரமாக இருக்கவேண்டும் என்பதில் கூட எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பாசிடிவ்வாக இருப்பதில் எனக்கு உடன் பாடு அதிகம். என்ற நோக்கத்தின் வெளிப்பாடு தான் இந்த விசயத்தை பற்றி கேட்டு எழுத தூண்டியது அவ்வளவு தான்.

ஒரு வேண்டுகோள்: நான் பதிவேட்டில் கூறியுள்ள விசயத்தையும், தங்களின் பதிலையும் இதனுடன் இணைக்க முடியுமா. சிரமம் கொடுப்பதாக நினைக்க வேண்டாம்,முடியாவிட்டால் பரவாயில்லை. நன்றி.

அன்பு சகோதரி அவர்களுக்கு,

என்னுடைய வேண்டுகோளை ஏற்று மன்றத்தில் பதிவு தொடங்கியமைக்கு மிக்க நன்றி.

உரையாடலுக்கு மன்றம்தான் பல வகையிலும் சிறந்தது. விருந்தினர் பதிவேட்டில் யார் வேண்டுமானாலும் (பெயர் பதிவு செய்யாதவர் கூட) என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். பதிவுகளை நீக்கலாமே தவிர மாற்ற முடியாது. பத்தி பத்தியாக டைப் செய்ய முடியாது. links கொடுக்க முடியாது. இப்படி பல பிரச்சனைகள். அறுசுவை குறித்து ஓரிரு வரிகளில் வருகையாளர்களின் எண்ணங்களை பதிவதற்காக உருவாக்கப்பட்டது என்பதால், அதில் நிறைய சிறப்பம்சங்கள் கிடையாது. எனவே, அனைவருக்கும் நான் சொல்வது, கேள்வி பதில் போல் செல்லும் விசயத்தை தயவுசெய்து மன்றத்தில் பதிவு செய்யுங்கள். விருந்தினர் பதிவேட்டில் கேள்விகளை பதிவு செய்யவேண்டாம்.

சரி, விசயத்திற்கு வருகின்றேன். படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த பாஸிட்டிவ், நெகட்டிவ் கொஞ்சம் குழப்பமான விசயம். நான் அவ்வளவு bright கிடையாது. அதனால்தான் என்னவோ நீங்கள் சொல்ல வரும் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சமைக்கத் தெரியாதவரும் சமைக்கலாம் என்று சொல்லுவது நெகட்டிவ்வான விசயம் என்று சொல்கின்றீர்களா?

நீங்கள் "சமையல் அனுபவம் இல்லாதவர்" என்ற வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பாஸிட்டிவ், நெகட்டிவ் முடிவு செய்வதுபோல் எனக்கு தோன்றுகின்றது. நான் முழுப் பொருளையும் பார்க்கின்றேன். எனக்கென்னவோ தவறாக தெரியவில்லை.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இது என் தரப்பு விளக்கம்தான். நீங்கள் சொல்வதை மறுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இதை நான் சொல்லவில்லை. இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது எனது எண்ணம். அறுசுவையின் முதல் வாக்கியம் தாங்கள் விரும்பும் வாக்கியமாக இருந்தால் எனக்கு உண்மையில் மகிழ்ச்சிதான். எனவே, தாங்களே அந்த வாக்கியத்தை மாற்றியமைத்து கொடுத்துவிடுங்கள். எப்படி கொடுக்கலாம் என்ற முழு வாக்கியத்தையும் இங்கே கொடுங்கள். நான் மாற்றிவிடுகின்றேன்.

ஒரே ஒரு கட்டுப்பாடு. வார்த்தைகள், வரிகளின் எண்ணிக்கை (கிட்டத்திட்ட) அதில் உள்ள அளவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வரிகள் அதிகமானால், அந்த பெட்டியின் அளவும் பெரிதாகிவிடும். அப்படி அளவு மாறினால் பக்கத்துப் பெட்டி சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் பார்பதற்கு நன்றாக இருக்காது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வாக்கியங்களை அமைக்க வேண்டியிருக்கின்றது.

விருந்தினர் பதிவேட்டில் நீங்கள் பதிவு செய்ததை இங்கே கொண்டு வருவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. உங்கள் பெயரில் இங்கே நான் வெளியிடுதல் கொஞ்சம் கடினம். நீங்கள்தான் அதை செய்யவேண்டும். என்னுடைய பதிவை நான் கொண்டு வந்துவிடுவேன்.

நன்றி அட்மின், எனது கருத்துக்கு செவிமடுத்ததுமல்லாமல் அதன் முடிவை எடுக்கும் பொருப்பையும் எனக்கே கொடுத்துள்ளதற்க்கு என்ன கைமாறு செய்யப் முடியுமோ தெரியவில்லை.நிச்சயமாக நான் பெற்ற பாக்கியமாகவே நினைத்து அதற்க்கு எனது மனதார நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.

தங்களின் பொருமையான பதிலை கண்டதும் ஆனந்தமாக இருந்தது. காரணம் முட்டாள்களோடு எதைக் குறித்தும் நாள்முழுக்க வாதாடினாலும் ஒரு முடிவுக்கும் வர முடியாது. ஆனால் புத்திசாளிகளுடன் வாதிட்டு தோற்று போனாலும் அதைப் பெறுமையாகவே கருதலாம். அவ்வாறு புத்திசாலியும், திறமைசாலியுமான தங்களிடத்தில் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் வாதாடுவதையும் பெருமைய்யாக நினைக்கின்றேன்.

உங்களிடத்தில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருப்பதையும் கவனித்திருக்கின்றேன், அதாவது யாரையும் விட்டுக் கொடுக்காமல், தவறு செய்யும் குழந்தைய்யைக் கூட ஒரு தாய் அரவணைத்துச் செல்லும் குணதிசயம் கொண்ட தங்களின் குணத்திற்க்கு முன்னால் எல்லா விதத்திலுமே அனைவரும் தோற்றுப்போவார்கள் என்பது உறுதி.

இனி விசயத்திற்க்கு வருகின்றேன். பாஸிடிவ், நெகட்டிவ் என்பதெல்லாம் அவரவரின் கண்ணோட்டத்தை பொருத்தது,ஆகவே என்னுடைய கணோட்டத்தில் நான் புரிந்துக் கொண்டதை எழுதியிருந்தேன். ஆனாலும் என்னைப் போன்ற எல்லாத்தையும் நேர்மாறாக பார்க்கும் குணம்படைத்தவர்களுக்கு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், மேலும் தாங்கள் கேட்டுக் கொண்டதற்க்காகவும் எழுதியிருக்கின்றேன். தங்களின் வாக்கியங்களுக்கும், என்னுடைய்ய வாக்கியங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் reflex ல் கொஞ்சம் மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். அதாவது,

"சமையலை எளிதாக சமைக்கும் வண்ணம், படிப்படியான விளக்கப்படங்களுடன் நூற்றுக்கணக்கான குறிப்புகள், தெளிவானப் படங்களுடன் தினமும் ஒரு புது குறிப்பு கொண்ட, யாரும் சமைக்கலாம் என்று அனைவருக்கும் உதவும் பகுதி இது"

பொருப்பை உங்களிடத்தில் உப்படைத்து விட்டேன், ஏதாவது மாற்றம் தேவையிருந்தாலும் சரி செய்துக் கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்.தலையைப் பிய்த்துக் கொள்வதும், பிய்த்துக் கொள்ளாமல் விட்டு விடுவதும் இனி உங்கள் பாடு, அன்புடன் நன்றி.

சகோதரி அவர்களுக்கு, மிக்க நன்றி.

தாங்கள் உண்மையிலேயே என்னைப் பாராட்டுகின்றீர்களா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், வெறும் வார்த்தைகளை நம்பும் அப்பாவியாய், உங்கள் புகழ்ச்சியினை ஏற்று, உள்ளம் குளிர்ந்து எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் :-)

வாக்கியத்தை மாற்றிக் கொடுத்தமைக்கும் நன்றி. அதில் சிறு திருத்தம் செய்ய வேண்டும். சமையலை எளிதாக சமைத்தல் என்ற வாக்கியம் கொஞ்சம் இடிக்கின்றது. சமையலை சமைத்தல் என்பது மிகவும் சரியான வாக்கியம் அல்ல. சமையல் செய்தல் என்று சொல்லலாம். அல்லது உணவுகளை சமைத்தல் என்று சொல்லலாம். 'சமையலை' என்பதை நீக்கி, யாரும் அல்லது யாவரும் என்று சேர்த்தால் நீங்கள் கொடுத்துள்ள வாக்கியம் சரியாய் வரும் என்று எண்ணுகின்றேன்.

"யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம் .." என்று தொடங்கினால் பாஸிட்டிவ்வாக இருக்குமா என்பதை தெரியப்படுத்தவும். அல்லது அதற்கு மாற்று வார்த்தைகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். உடன் மாற்றிவிடுகின்றேன்.

திரு அட்மின் அவர்களுக்கு, என்னுடைய்ய கருத்தை ஏற்றுக் கொண்டதற்க்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியுள்ள தொடக்க வாக்கியமான "யாவரும்" என்று தொடங்குவது மிக பொருத்தமாக உள்ளது. அதிலும் மாபெரும் புகழை அடைந்துக் கொண்டிருக்கும் நமது அறுசுவை இணையதளத்தின் வளர்ச்சிய்யை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவதாக, பாஸிடிவ்வாக அமைந்துள்ளது.

யாரையும் குறிப்பிடாமல் வாக்கியங்கள் தொடர்ந்து வருவது, மிக அழகாகவும் உள்ளது Exellent..., ஆகவே இவ்வாறே "யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம்," என்றே தொடங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.

நான் புதிய தொடக்க வார்த்தைய்யை சேர்த்து பார்க்கும் பொழுது, தங்களின் பொன்னான வார்த்தைகளை இழக்கவிடாமல் எழுதவேண்டும் என்று நினைத்தேனே தவிர சமையலை சமைக்க முடியாது என்று கவனிக்கவில்லை.

இதற்க்கு தான் நான் அப்பொழுதே தங்களின் திறமைகளை பாராட்டி கூறியிருந்தேன். ஆனால் நீங்களோ அதை வஞ்சப்புகழ்ச்சியோ என்று சந்தேகப் படுகின்றீர்கள். இப்பொழுதாவது நம்புங்கள். சகோதரிகள் எப்பொழுதும் தங்கள் சகோதரரை புகழ்ந்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் மிகச்சரியாக அளந்து தான் பாராட்டுவார்கள்.

ஆகவே நான் மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் தங்களின் உடன் பிறவா சகோதரிகளும், தங்களை புகழ்ந்தும் பாராட்டிக்கொண்டும் இருக்கின்றார்களே தவிர, இங்கு வஞ்சப் புகழ்ச்சிக்கு இடமில்லை, அவைகள் வஞ்சகமில்லாதவைகள் என்று தாராளமாக எங்களை நம்பலாம். அன்புடன் அன்பு சகோதரி, நன்றி.

நன்றி அட்மின். புதிய வாக்கியங்களை இணைத்து விட்டதை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இணைய தளத்தில் அறுசுவை டாட் காம், ஆலமரத்தைப் போல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து, தழைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூட வேண்டும் என்று வாழ்த்தியும் விடைப் பெறுகின்றேன் நன்றி.

மேலும் சில பதிவுகள்