நீலகிரி மட்டன் குருமா

தேதி: April 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - 1/2 கிலோ,
தயிர் - 1/4 லிட்டர்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ,
கசகசா - 3 டீஸ்பூன்,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 5,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
நெய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு.


 

மட்டனைக் கழுவி தயிரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாதி வெங்காயம், பச்சை மிளகாய், கசகசா, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு காய்ந்தவுடன் மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது, தனியா தூள், ஊற வைத்த கறி சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடவும்.
மட்டன் நன்கு வெந்ததும் கரம் மசாலாவை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விமா உங்க மட்டன் குருமா சூப்பர்.தக்காளி இல்லாமல் நல்ல இருந்தது.

அன்பு மேனகா,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. தக்காளி இல்லாதது தான் இதன் சிறப்பே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.