கடாய் பனீர்

தேதி: April 16, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பனீர் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 4,
குடை மிளகாய் - 1,
காய்ந்த மிளகாய் - 5,
பச்சை மிளகாய் - 4,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 7 பல்,
தக்காளி - 5,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 4 ஸ்பூன்.


 

பனீரை 1 அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம், குடை மிளகாயை நீளமாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் பாதி வெண்ணெய் விட்டு வெங்காயம், குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, தனியே எடுத்து வைக்கவும்.
மீதி வெண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை போட்டு வதக்கவும்.
எண்ணெய் மேலெ பிரிந்து வரும் வரை வதக்கிய பின் பனீர், வதக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து, கலந்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Thank you for this recipe. My elder daughter, who is picky eater liked this "kadai paneer" very much. Now this has become our family's favorite dish

Hai Selvi,
today i tried this recipe. it came out very well. thanks for sharing this recipe with us. Keep posting more recipes.

When there is a will,there is a way.... :)

i really liked this receipe.went good with chapathi.please post more receipes with paneer and mushroom.